• May 19 2026

பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம்!

Ziya / May 19th 2026, 12:39 pm
image

பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் என்று  குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை கரையூர் அ. மி. த. க. பாடசாலையில் கடமை நிறைவேற்று அதிபராக  பணியாற்றிக் கொண்டிருந்தவரை சில நாட்களுக்கு  முன்னர் கல்வி திணைக்களம் தற்காலிக இடமாற்றம் செய்திருந்ததும் இந் நிலையில் தற்காலிக 

இடமாற்றம் செய்யப்பட்டிருந்த  அதிபரை மீண்டும் தமது  பாடசாலைக்கு நியமிக்குமாறு  கோரி இன்றைய தினம் 7. 45 மணியளவில்  பெற்றோர்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாற்றாதே மாற்றாதே அதிபரை மாற்றாதே,  அதிபரின் தற்காலிக இடமாற்றத்திற்கு காரணம் என்ன அதிகாரிகளே பதில் சொல் உட்பட பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.

போராட்டம் முடிவில்  கல்வி பணிப்பாளருக்கு வழங்குவதற்கு  மகஜர்  ஒன்றும் பதில் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இதில் சுமார் 75க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கிராம மக்கள் நலம் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை குறித்த அதிபர் மீது அதிருப்தியுற்ற  பெற்றோர்கள்,  பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் குறித்த அதிபரை மாற்றம் வேண்டும் என்று பல வருடங்களாக உரிய கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். 

இதன் அடிப்படையிலேயே குறித்த கடமை நிறைவேற்று அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். இன்றைய ஆர்ப்பாடடத்தை தொடர்ந்து எமது ஊடகவியலாளரை தொலைபேசியில்  தொடர்புகொண்ட குறித்த கடமை நிறைவேற்று அதிபருக்கு எதிரான அணி அவருக்கு எதிரான குற்றச் சாட்டுக்களை முன்வைத்து போராட்டம் மற்றும் ஊடாக் சந்திப்பை நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்துத்தனர் 

பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம் பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் என்று  குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்திருந்தனர்.யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை கரையூர் அ. மி. த. க. பாடசாலையில் கடமை நிறைவேற்று அதிபராக  பணியாற்றிக் கொண்டிருந்தவரை சில நாட்களுக்கு  முன்னர் கல்வி திணைக்களம் தற்காலிக இடமாற்றம் செய்திருந்ததும் இந் நிலையில் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த  அதிபரை மீண்டும் தமது  பாடசாலைக்கு நியமிக்குமாறு  கோரி இன்றைய தினம் 7. 45 மணியளவில்  பெற்றோர்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் மாற்றாதே மாற்றாதே அதிபரை மாற்றாதே,  அதிபரின் தற்காலிக இடமாற்றத்திற்கு காரணம் என்ன அதிகாரிகளே பதில் சொல் உட்பட பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.போராட்டம் முடிவில்  கல்வி பணிப்பாளருக்கு வழங்குவதற்கு  மகஜர்  ஒன்றும் பதில் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.இதில் சுமார் 75க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கிராம மக்கள் நலம் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இதேவேளை குறித்த அதிபர் மீது அதிருப்தியுற்ற  பெற்றோர்கள்,  பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் குறித்த அதிபரை மாற்றம் வேண்டும் என்று பல வருடங்களாக உரிய கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். இதன் அடிப்படையிலேயே குறித்த கடமை நிறைவேற்று அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். இன்றைய ஆர்ப்பாடடத்தை தொடர்ந்து எமது ஊடகவியலாளரை தொலைபேசியில்  தொடர்புகொண்ட குறித்த கடமை நிறைவேற்று அதிபருக்கு எதிரான அணி அவருக்கு எதிரான குற்றச் சாட்டுக்களை முன்வைத்து போராட்டம் மற்றும் ஊடாக் சந்திப்பை நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்துத்தனர் 

Advertisement

Advertisement

Advertisement