கொட்டகலை பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த பரோபகார மனப்பான்மை கொண்ட ஒருவர், பிரதேச சபைக்கு சொந்தமான பொது விளையாட்டு மைதானத்தை சுமார் 70 இலட்சம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கி, மேடை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும் அமைத்து பிரதேச சபைக்கு கையளிக்க முன்வந்துள்ளதாக பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், மைதான விரிவாக்கத்திற்குத் தேவையான காணி பெற தோட்ட நிர்வாகம், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளதாகவும், இத்திட்டம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் விளையாட்டு திறன்களை மேம்படுத்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, லொக்ஹில் தோட்டப் பகுதியில் மர ஆலை அமைப்பதற்கு பிரதேச சபை எந்த அனுமதியும் வழங்கவில்லை என்றும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்திற்கும் சபை ஆதரவு அளிக்காது என்றும் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தனி நபரின் 70 இலட்ச நன்கொடையில் கொட்டகலை விளையாட்டு மைதானம் நவீனமயம் கொட்டகலை பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த பரோபகார மனப்பான்மை கொண்ட ஒருவர், பிரதேச சபைக்கு சொந்தமான பொது விளையாட்டு மைதானத்தை சுமார் 70 இலட்சம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கி, மேடை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும் அமைத்து பிரதேச சபைக்கு கையளிக்க முன்வந்துள்ளதாக பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.மேலும், மைதான விரிவாக்கத்திற்குத் தேவையான காணி பெற தோட்ட நிர்வாகம், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளதாகவும், இத்திட்டம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் விளையாட்டு திறன்களை மேம்படுத்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.அதேவேளை, லொக்ஹில் தோட்டப் பகுதியில் மர ஆலை அமைப்பதற்கு பிரதேச சபை எந்த அனுமதியும் வழங்கவில்லை என்றும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்திற்கும் சபை ஆதரவு அளிக்காது என்றும் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.