கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்றது.
கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநரும் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரனின் வரவேற்புரையுடன் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆரம்பமானது.
தொடர்ந்து ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திணைக்களங்களின் கோரிக்கை, முதலீட்டாளர்களின் கோரிக்கைகளை என்பன ஆராயப்பட்டு அனுமதிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கடந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றமும் தனித்தனியாக ஆராயப்பட்டன.
இதன் பின்னர், துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வு நடைபெற்றது. நிரல் அமைச்சுக்கள், மாவட்டச் செயலகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், மாகாண சபையால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் என்பன தனித்தனியாக ஆராயப்பட்டன.
கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், சி.சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும், உள்ளூராட்சி சபைகளின் கௌரவ தவிசாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாதுகாப்புத் தரப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்றது. கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநரும் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரனின் வரவேற்புரையுடன் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆரம்பமானது. தொடர்ந்து ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திணைக்களங்களின் கோரிக்கை, முதலீட்டாளர்களின் கோரிக்கைகளை என்பன ஆராயப்பட்டு அனுமதிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கடந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றமும் தனித்தனியாக ஆராயப்பட்டன. இதன் பின்னர், துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வு நடைபெற்றது. நிரல் அமைச்சுக்கள், மாவட்டச் செயலகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், மாகாண சபையால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் என்பன தனித்தனியாக ஆராயப்பட்டன. கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், சி.சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும், உள்ளூராட்சி சபைகளின் கௌரவ தவிசாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாதுகாப்புத் தரப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.