• Apr 19 2026

காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

shanu / Mar 26th 2026, 2:02 pm
image

காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம், ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது.


இதன்போது மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விதமான அபிவிருத்திகள் தொடர்பாக ஆராயப்பட்டது. அத்துடன் மக்களது பிரச்சினைகளும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.


குறிப்பாக கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள நீலங்காடு காணி பிரச்சினை, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லைகள், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் தொடர்பான பிரச்சனைகள், குழாய்வழி குடிநீர் பிரச்சினை, பாடசாலைகளின் பிரச்சனைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.


ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காரைநகர் பிரதேச செயலர், திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸார், கடற்படையினர், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


மேலும் இன்றைய கூட்டமானது எந்தவிதமான குழப்பங்களும் இன்றி ஆரோக்கியமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம், ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது.இதன்போது மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விதமான அபிவிருத்திகள் தொடர்பாக ஆராயப்பட்டது. அத்துடன் மக்களது பிரச்சினைகளும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.குறிப்பாக கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள நீலங்காடு காணி பிரச்சினை, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லைகள், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் தொடர்பான பிரச்சனைகள், குழாய்வழி குடிநீர் பிரச்சினை, பாடசாலைகளின் பிரச்சனைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காரைநகர் பிரதேச செயலர், திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸார், கடற்படையினர், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.மேலும் இன்றைய கூட்டமானது எந்தவிதமான குழப்பங்களும் இன்றி ஆரோக்கியமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement