• Dec 02 2025

கந்தகாடு புனர்வாழ்வு பணியாளர்கள்,பயனாளிகள்; இராணுவத்தின் உதவியோடு பாதுகாப்பாக இடமாற்றம்!

shanuja / Dec 1st 2025, 4:00 pm
image

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் புனர்வாழ்வு பெறுகின்ற பயனாளிகள் மற்றும் பணியாளர்களையும் இராணுவத்தின் உதவியோடு இன்று  பாதுகாப்பான பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.


நாட்டை உலுக்கிய டிட்வா புயலின் பாதிப்புக்கள் நாடு முழுவதும் தணியாமலே உள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 


அதன் தொடர்ச்சியாக கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்த பணியாளர்கள், பயனாளிகள் என அனைவரும் இன்று இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 


பல சிரமங்களுக்கு மத்தியில் தமது வாகனங்களில் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு வேறு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 


பல சிரமங்களுக்கு மத்தியில் இராணுவத்தினர், கடற்படையினர் உள்ளிட்டோர் மக்களை மீட்கும் முயற்சியில் தீவிரமான செயற்பட்டு வருகின்றனர். 

கந்தகாடு புனர்வாழ்வு பணியாளர்கள்,பயனாளிகள்; இராணுவத்தின் உதவியோடு பாதுகாப்பாக இடமாற்றம் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் புனர்வாழ்வு பெறுகின்ற பயனாளிகள் மற்றும் பணியாளர்களையும் இராணுவத்தின் உதவியோடு இன்று  பாதுகாப்பான பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.நாட்டை உலுக்கிய டிட்வா புயலின் பாதிப்புக்கள் நாடு முழுவதும் தணியாமலே உள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்த பணியாளர்கள், பயனாளிகள் என அனைவரும் இன்று இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பல சிரமங்களுக்கு மத்தியில் தமது வாகனங்களில் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு வேறு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பல சிரமங்களுக்கு மத்தியில் இராணுவத்தினர், கடற்படையினர் உள்ளிட்டோர் மக்களை மீட்கும் முயற்சியில் தீவிரமான செயற்பட்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement