• Feb 27 2026

கல்முனை பிரதேச செயலக வருடாந்த ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும்!

Ziya / Feb 26th 2026, 3:31 pm
image

கல்முனை பிரதேச செயலக  ஊழியர் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  வருடாந்த ஒன்று கூடலும்  இப்தார் நிகழ்வும்  நேற்று(25) மாலை  பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இதன் போது குறித்த நிகழ்விற்கு கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி.எம்.எம். அன்சார் தலைமை தாங்கியதுடன் அம்பாறை மாவட்ட அரச அதிபர் சிந்தக அபேவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.


அத்துடன்   பிரதேச செயலக கணக்காளர் எம்.எஸ்.அமீர் அலி திட்டமிடல் உதவிப் பணிப்பாளர்.ஏ.எல்.ஏ.மஜீத்  நிருவாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.அன்வர்  அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல்.யாஸீன் பாவா உட்பட கிளைத் தலைவர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.  


அத்துடன் அலுவலகத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர்கள் இடமாற்றலாகி சென்றவர்கள் ஆகியோருக்கு கௌரவமளிக்கப்பட்டதுடன்  இரவு போசனமும் சகலருக்கும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


கல்முனை பிரதேச செயலக வருடாந்த ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும் கல்முனை பிரதேச செயலக  ஊழியர் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  வருடாந்த ஒன்று கூடலும்  இப்தார் நிகழ்வும்  நேற்று(25) மாலை  பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.இதன் போது குறித்த நிகழ்விற்கு கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி.எம்.எம். அன்சார் தலைமை தாங்கியதுடன் அம்பாறை மாவட்ட அரச அதிபர் சிந்தக அபேவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.அத்துடன்   பிரதேச செயலக கணக்காளர் எம்.எஸ்.அமீர் அலி திட்டமிடல் உதவிப் பணிப்பாளர்.ஏ.எல்.ஏ.மஜீத்  நிருவாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.அன்வர்  அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல்.யாஸீன் பாவா உட்பட கிளைத் தலைவர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.  அத்துடன் அலுவலகத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர்கள் இடமாற்றலாகி சென்றவர்கள் ஆகியோருக்கு கௌரவமளிக்கப்பட்டதுடன்  இரவு போசனமும் சகலருக்கும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement