முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் ஆகியோரை எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை, வத்தளை நீதிவான் நீதிமன்றத்தில் மேற்படி சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்று முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரின் இரண்டு புதல்வர்கள் உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள், நீண்ட நாள்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜோன்ஸ்டனுக்கும் புதல்வர்களுக்கும் மார்ச் 6 வரை விளக்கமறியல் நீடிப்பு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் ஆகியோரை எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.நேற்று வெள்ளிக்கிழமை, வத்தளை நீதிவான் நீதிமன்றத்தில் மேற்படி சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்று முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரின் இரண்டு புதல்வர்கள் உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள், நீண்ட நாள்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.