• Oct 30 2026

கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றிற்கு உயர்வு பெற்றார் ஜெயந்திமாலா பிரியதர்சன்!

Aathira / Oct 29th 2026, 9:06 am
image

அம்பாறை கல்வி வலயத்தின் திட்டமிடல் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி வரும் திருமதி ஜெயந்திமாலா பிரியதர்சன், கல்வி நிர்வாக சேவையின் தரம் ஒன்றிற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் குறுமண்வெளியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தனது ஆரம்பக் கல்வியை குறுமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் பயின்றார். 

தொடர்ந்து, மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்று, விஞ்ஞானப் பட்டதாரியானார்.

கல்வி நிர்வாக சேவைக்கான திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த இவர், கல்முனை மற்றும் பட்டிருப்பு உள்ளிட்ட கல்வி வலயங்களில் கல்வி அபிவிருத்தி மற்றும் கல்வி முகாமைத்துவப் பிரிவுகளுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி, சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பைப் பெற்ற நேர்மையான நிர்வாகியாகவும் இவர் அறியப்படுகிறார்.

 மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ள ஜெயந்திமாலா பிரியதர்சன், எதிர்காலத்தில் கிழக்கு மாகாணக் கல்வித்துறையில் மேலும் உயரிய பதவிகளை வகிப்பார் எனப் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

கல்வி நிர்வாக சேவையில் தரம் ஒன்றிற்கு உயர்வு பெற்றுள்ள இவருக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றிற்கு உயர்வு பெற்றார் ஜெயந்திமாலா பிரியதர்சன் அம்பாறை கல்வி வலயத்தின் திட்டமிடல் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி வரும் திருமதி ஜெயந்திமாலா பிரியதர்சன், கல்வி நிர்வாக சேவையின் தரம் ஒன்றிற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.மட்டக்களப்பு மாவட்டத்தின் குறுமண்வெளியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தனது ஆரம்பக் கல்வியை குறுமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் பயின்றார். தொடர்ந்து, மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்று, விஞ்ஞானப் பட்டதாரியானார்.கல்வி நிர்வாக சேவைக்கான திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த இவர், கல்முனை மற்றும் பட்டிருப்பு உள்ளிட்ட கல்வி வலயங்களில் கல்வி அபிவிருத்தி மற்றும் கல்வி முகாமைத்துவப் பிரிவுகளுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி, சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார்.அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பைப் பெற்ற நேர்மையான நிர்வாகியாகவும் இவர் அறியப்படுகிறார். மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ள ஜெயந்திமாலா பிரியதர்சன், எதிர்காலத்தில் கிழக்கு மாகாணக் கல்வித்துறையில் மேலும் உயரிய பதவிகளை வகிப்பார் எனப் பலரும் எதிர்பார்க்கின்றனர்.கல்வி நிர்வாக சேவையில் தரம் ஒன்றிற்கு உயர்வு பெற்றுள்ள இவருக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement