வடக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் அலகும் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய கலாமன்றங்களுக்கு இடையிலான போட்டிகள் இன்றையதினம் (21.05.2026) புதுக்குடியிருப்புப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டிகளில் ஜெயம் நாடகக் கல்லூரி சார்பாகப் பங்கேற்ற கலைஞர்கள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பான வெற்றிகளைப் பெற்று புதுக்குடியிருப்பு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அதன்படி வீதி நாடகம், இசை நாடகம், வில்லுப்பாட்டு, கையெழுத்துச் சஞ்சிகை ஆகியவற்றில் முதலாமிடமும்,கிராமியப் பாடல், கும்மி நடனம் ஆகியவற்றில் இரண்டாமிடமும்
என பல்வேறு பிரிவுகளில் வெற்றியீட்டியுள்ளனர்.
மேலும் வீதி நாடகம், இசை நாடகம், வில்லுப்பாட்டு, கிராமியப் பாடல் மற்றும் கும்மி நடனம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கான எழுத்துரு, பாடல் வரிகள் மற்றும் நெறியாள்கை பணிகளை வித்தகக்கவிஞர் ஜெயம் ஜெகன் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிகளில் பங்கேற்று தமது கலைத்திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்திய ஜெயம் நாடகக் கல்லூரி கலைஞர்களுக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
புதுக்குடியிருப்பில் ஜெயம் நாடகக் கல்லூரி சாதனை வடக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் அலகும் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய கலாமன்றங்களுக்கு இடையிலான போட்டிகள் இன்றையதினம் (21.05.2026) புதுக்குடியிருப்புப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.இப்போட்டிகளில் ஜெயம் நாடகக் கல்லூரி சார்பாகப் பங்கேற்ற கலைஞர்கள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பான வெற்றிகளைப் பெற்று புதுக்குடியிருப்பு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.அதன்படி வீதி நாடகம், இசை நாடகம், வில்லுப்பாட்டு, கையெழுத்துச் சஞ்சிகை ஆகியவற்றில் முதலாமிடமும்,கிராமியப் பாடல், கும்மி நடனம் ஆகியவற்றில் இரண்டாமிடமும்என பல்வேறு பிரிவுகளில் வெற்றியீட்டியுள்ளனர்.மேலும் வீதி நாடகம், இசை நாடகம், வில்லுப்பாட்டு, கிராமியப் பாடல் மற்றும் கும்மி நடனம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கான எழுத்துரு, பாடல் வரிகள் மற்றும் நெறியாள்கை பணிகளை வித்தகக்கவிஞர் ஜெயம் ஜெகன் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இப்போட்டிகளில் பங்கேற்று தமது கலைத்திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்திய ஜெயம் நாடகக் கல்லூரி கலைஞர்களுக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.