அமெரிக்க நாடாளுமன்றத்தில் பொய் சாட்சியம் அளித்ததற்காக, முன்னாள் எஃப்.பி.ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமி மீது அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்க நாட்டு முன்னாள் வழக்கறிஞர் மற்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI (Federal Bureau of Investigation) இயக்குநராக 2013 முதல் 2017 வரை பணியாற்றியவர் ஜேம்ஸ் கோமி .
2013-ல் அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவரை FBI இயக்குநராக நியமித்தார்.
எனினும் 2017-ல் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் அவரை பதவியில் இருந்து நீக்கினார்.
அவருடைய இந்த நீக்கம், அரசியல் மற்றும் சட்ட ரீதியாக அதிக விவாதத்தையும் கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அளித்த சாட்சியத்தின் போது பொய் சாட்சியம் அளித்ததாகவும், காங்கிரஸ் விசாரணையை தவறாக வழிநடத்தியதாகவும் ஜேம்ஸ் கோமி மீது தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனினும் இதற்கு பதிலளித்த கோமி, தான் நிரபராதியாக உணர்கிறேன் , கூட்டாட்சி நீதித்துறை அமைப்பில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்.
நான் நிரபராதி, எனவே விசாரணையை நடத்தி உண்மையை கண்டறிய செய்வேன்.
டொனால்ட் டிரம்பை எதிர்த்து நிற்பது இயலாத காரியம். இதனை நானும் எனது குடும்பத்தினரும் பல ஆண்டுகளாக அறிந்திருக்கிறோம்,
ஆனால் வேறு வழியில் வாழ்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றார்.
மேலும் கோமியின் குற்றச்சாட்டுக்குப் பிறகு, கோமியின் மருமகன் டிராய் எட்வர்ட்ஸ் நீதித்துறையில் உள்ள தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இதேவேளை, குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஜேம்ஸ் கோமிக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பொய் சாட்சியம்; ஜேம்ஸ் கோமி மீது குற்றச்சாட்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் பொய் சாட்சியம் அளித்ததற்காக, முன்னாள் எஃப்.பி.ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமி மீது அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.அமெரிக்க நாட்டு முன்னாள் வழக்கறிஞர் மற்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI (Federal Bureau of Investigation) இயக்குநராக 2013 முதல் 2017 வரை பணியாற்றியவர் ஜேம்ஸ் கோமி .2013-ல் அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவரை FBI இயக்குநராக நியமித்தார். எனினும் 2017-ல் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் அவரை பதவியில் இருந்து நீக்கினார்.அவருடைய இந்த நீக்கம், அரசியல் மற்றும் சட்ட ரீதியாக அதிக விவாதத்தையும் கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்தியது.இந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அளித்த சாட்சியத்தின் போது பொய் சாட்சியம் அளித்ததாகவும், காங்கிரஸ் விசாரணையை தவறாக வழிநடத்தியதாகவும் ஜேம்ஸ் கோமி மீது தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் இதற்கு பதிலளித்த கோமி, தான் நிரபராதியாக உணர்கிறேன் , கூட்டாட்சி நீதித்துறை அமைப்பில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்.நான் நிரபராதி, எனவே விசாரணையை நடத்தி உண்மையை கண்டறிய செய்வேன். டொனால்ட் டிரம்பை எதிர்த்து நிற்பது இயலாத காரியம். இதனை நானும் எனது குடும்பத்தினரும் பல ஆண்டுகளாக அறிந்திருக்கிறோம், ஆனால் வேறு வழியில் வாழ்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றார்.மேலும் கோமியின் குற்றச்சாட்டுக்குப் பிறகு, கோமியின் மருமகன் டிராய் எட்வர்ட்ஸ் நீதித்துறையில் உள்ள தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.இதேவேளை, குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஜேம்ஸ் கோமிக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.