• May 18 2025

யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர் சரோஜினியின் 27ஆவது ஆண்டு நினைவேந்தல்..!

Sharmi / May 17th 2025, 9:25 pm
image

யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சரோஜினி யோகேஸ்வரனின் 27 வது ஆண்டு நினைவு தினம் இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அக் கட்சியின் அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது சுடரேற்றி, சரோஜினி யோகேஸ்வரனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வெ.யோகேஸ்வரனின் மனைவியான சரோஜினி யாழ்,மாநகர முதல்வராக இருந்த கால பகுதியில், கடந்த 1998 மே 17 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர் சரோஜினியின் 27ஆவது ஆண்டு நினைவேந்தல். யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சரோஜினி யோகேஸ்வரனின் 27 வது ஆண்டு நினைவு தினம் இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டது.தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அக் கட்சியின் அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.இதன்போது சுடரேற்றி, சரோஜினி யோகேஸ்வரனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வெ.யோகேஸ்வரனின் மனைவியான சரோஜினி யாழ்,மாநகர முதல்வராக இருந்த கால பகுதியில், கடந்த 1998 மே 17 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement