• Jun 20 2026

பல பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காணும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆரம்பம்!

Chithra / Jun 19th 2026, 11:23 am
image


யாழ். மாவட்டத்தின் பிரதேசங்கள் தோறும் காணப்படும் தீர்வு காணப்படவேண்டிய பிரச்சினைகள், அபிவிருத்திகள் சட்டம் ஒழுங்குகளை முன்னெடுப்பது தொடர்பான ஒன்றிணைக்கப்பட்ட தொகுப்புகளை உள்ளடக்கிய மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது.


யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (19)  மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஒழுங்கமைப்பில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.


வடக்கின் ஆளுநர் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன் ஜெயச்சந்திர மூர்த்தி, வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராமனாதன் அர்ச்சுனா ஆகியோரது பிரசன்னத்துடன் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதேச சபைகளின் தலைவர்கள், செயலாளர்கள், பிரதேச செயலர்கள், துறைசார் திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள், முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்துறைசார் தரப்பினரும் கலந்துகொண்டுபிரச்சினைகளை சுட்டிக்காட்டியும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் ஆராய்ந்திருந்தனர்.


இதன்போது பொதுப் போக்குவரத்து, புகையிரத சேவை அதன் இடையூறுகள் மற்றும் பாதுகாப்பு, குடிநீர், விவசாயம், சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, சட்டவிரோத சமூக விரோத செயற்பாடுகள் கட்டுப்படுத்தல், போதை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.


பல பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காணும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆரம்பம் யாழ். மாவட்டத்தின் பிரதேசங்கள் தோறும் காணப்படும் தீர்வு காணப்படவேண்டிய பிரச்சினைகள், அபிவிருத்திகள் சட்டம் ஒழுங்குகளை முன்னெடுப்பது தொடர்பான ஒன்றிணைக்கப்பட்ட தொகுப்புகளை உள்ளடக்கிய மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது.யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (19)  மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஒழுங்கமைப்பில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.வடக்கின் ஆளுநர் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன் ஜெயச்சந்திர மூர்த்தி, வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராமனாதன் அர்ச்சுனா ஆகியோரது பிரசன்னத்துடன் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதேச சபைகளின் தலைவர்கள், செயலாளர்கள், பிரதேச செயலர்கள், துறைசார் திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள், முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்துறைசார் தரப்பினரும் கலந்துகொண்டுபிரச்சினைகளை சுட்டிக்காட்டியும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் ஆராய்ந்திருந்தனர்.இதன்போது பொதுப் போக்குவரத்து, புகையிரத சேவை அதன் இடையூறுகள் மற்றும் பாதுகாப்பு, குடிநீர், விவசாயம், சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, சட்டவிரோத சமூக விரோத செயற்பாடுகள் கட்டுப்படுத்தல், போதை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement