• Apr 15 2026

திருகோணமலை மேலதிக அரச அதிபராக (காணி) ஜெ.ஸ்ரீபதி நியமனம்!

shanu / Jan 5th 2026, 12:27 pm
image

திருகோணமலை மாவட்ட மேலதிக புதிய அரச அதிபராக (காணி) ஜெயகௌரி ஸ்ரீபதி இன்று (05)மாவட்ட செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.


தம்பலகாமம் பிரதேச செயலாளராக பணியாற்றிய நிலையில் மாவட்ட மேலதிக அரச அதிபராக கடமையினை பொறுப்பேற்றார். விசேட மத அனுஷ்டானங்களுடன் கடமையினை பொறுப்பேற்றார்.


இதில் மாவட்ட அரச  அதிபர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார, மேலதிக அரச அதிபர் எஸ்.சுதாகரன் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 


மேலதிக அரச அதிபராக (காணி) பொறுப்பேற்ற நிலையில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றவுள்ளார்.


2014ல் இருந்து 2025 வரையான காலப் பகுதியில் தம்பலகாமம் பிரதேச செயலாளராக கடமையாற்றிய ஜெ.ஸ்ரீபதி அவர்கள் இலங்கை நிர்வாக சேவையை விசேட தரத்தை சேர்ந்தவராவார். 


இதற்கு முன்னர் குச்சவெளி உதவி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கடமையினை பொறுப்பேற்றதன் பின் இந் நியமனம் மூலமான சிறப்பான சேவைகளை முன்னெடுப்பதாக எதிர்பார்ப்பதாக ஊடகங்களிடம்  தெரிவித்தார்.


திருகோணமலை மேலதிக அரச அதிபராக (காணி) ஜெ.ஸ்ரீபதி நியமனம் திருகோணமலை மாவட்ட மேலதிக புதிய அரச அதிபராக (காணி) ஜெயகௌரி ஸ்ரீபதி இன்று (05)மாவட்ட செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.தம்பலகாமம் பிரதேச செயலாளராக பணியாற்றிய நிலையில் மாவட்ட மேலதிக அரச அதிபராக கடமையினை பொறுப்பேற்றார். விசேட மத அனுஷ்டானங்களுடன் கடமையினை பொறுப்பேற்றார்.இதில் மாவட்ட அரச  அதிபர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார, மேலதிக அரச அதிபர் எஸ்.சுதாகரன் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலதிக அரச அதிபராக (காணி) பொறுப்பேற்ற நிலையில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றவுள்ளார்.2014ல் இருந்து 2025 வரையான காலப் பகுதியில் தம்பலகாமம் பிரதேச செயலாளராக கடமையாற்றிய ஜெ.ஸ்ரீபதி அவர்கள் இலங்கை நிர்வாக சேவையை விசேட தரத்தை சேர்ந்தவராவார். இதற்கு முன்னர் குச்சவெளி உதவி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.கடமையினை பொறுப்பேற்றதன் பின் இந் நியமனம் மூலமான சிறப்பான சேவைகளை முன்னெடுப்பதாக எதிர்பார்ப்பதாக ஊடகங்களிடம்  தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement