வெளிநாட்டு கடன்களை மீளச் செலுத்தும் நடைமுறையில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, 'சத்ய கவேஷகயோ' (சத்தியத்தை தேடுவோர்) அமைப்பினால் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பிரேம்நாத் சி. தொலவத்த, தங்களது அமைப்பு நீண்டகாலமாக இவ்வாறான மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் தலையிட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழலில் வெளிநாட்டு கடன்களைக் கையாள்வதில் இடம்பெற்றுள்ள தவறுகள் குறித்து முறையான விசாரணை அவசியமானது எனவும், இது தொடர்பான விரிவான முறைப்பாட்டை மின்னஞ்சல் வாயிலாகத் தான் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் பிரஜை என்ற ரீதியில் இந்த நிதி கொடுக்கல் வாங்கல்களின் போது தவறு செய்தவர்கள் யார் என்பதைக் கண்டறிவதே தமது பிரதான நோக்கம் என்றார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் இதற்கு ஆலோசனைகளை வழங்கியவர்கள் என அனைவரும் தமது பொறுப்பிலிருந்து விலகிச் செல்ல முடியாது எனவும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டு மக்களுக்குச் சேர வேண்டிய நிவாரணங்களை வழங்குவதற்குப் பதிலாக, மக்களின் பணம் இவ்வாறான முறைகேடுகள் மூலம் விரயமாக்கப்படுவதைத் தடுக்க வேண்டியது அவசியம் என்றும், இழந்த நிதியை மீளப் பெற்றுக்கொள்வதற்கான சட்ட ரீதியான நகர்வுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தனது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு கடன்களை மீளச் செலுத்துவதில் இடம்பெற்ற முறைகேடுகள் - பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு வெளிநாட்டு கடன்களை மீளச் செலுத்தும் நடைமுறையில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, 'சத்ய கவேஷகயோ' (சத்தியத்தை தேடுவோர்) அமைப்பினால் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பிரேம்நாத் சி. தொலவத்த, தங்களது அமைப்பு நீண்டகாலமாக இவ்வாறான மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் தலையிட்டு வருவதாகக் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழலில் வெளிநாட்டு கடன்களைக் கையாள்வதில் இடம்பெற்றுள்ள தவறுகள் குறித்து முறையான விசாரணை அவசியமானது எனவும், இது தொடர்பான விரிவான முறைப்பாட்டை மின்னஞ்சல் வாயிலாகத் தான் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.நாட்டின் பிரஜை என்ற ரீதியில் இந்த நிதி கொடுக்கல் வாங்கல்களின் போது தவறு செய்தவர்கள் யார் என்பதைக் கண்டறிவதே தமது பிரதான நோக்கம் என்றார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் இதற்கு ஆலோசனைகளை வழங்கியவர்கள் என அனைவரும் தமது பொறுப்பிலிருந்து விலகிச் செல்ல முடியாது எனவும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். நாட்டு மக்களுக்குச் சேர வேண்டிய நிவாரணங்களை வழங்குவதற்குப் பதிலாக, மக்களின் பணம் இவ்வாறான முறைகேடுகள் மூலம் விரயமாக்கப்படுவதைத் தடுக்க வேண்டியது அவசியம் என்றும், இழந்த நிதியை மீளப் பெற்றுக்கொள்வதற்கான சட்ட ரீதியான நகர்வுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தனது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.