• Apr 18 2026

இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் முக்கிய பாதுகாப்பு தலைவர் உயிரிழப்பு

Chithra / Mar 18th 2026, 9:07 am
image


இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.


ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபை இன்று (18) வெளியிட்டுள்ள அறிக்கையில், 

லரிஜானியின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஈரான் நாட்டிற்காக அவர் ஆற்றிய சேவைகளையும் பாராட்டியுள்ளது.


ஈரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரியான அலி லரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்திருந்தது. 


ஈரானின் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் மிக முக்கியமான நபராக அவர் விளங்கியதால், அவரது மரணம் தற்போதைய போர்ச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அலி லரிஜானி, 2025 ஓகஸ்ட் மாதம் ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். 


அத்துடன், அவர் ஈரான் ஜனாதிபதியினதும் மற்றும் மறைந்த ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியினதும் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.


இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் முக்கிய பாதுகாப்பு தலைவர் உயிரிழப்பு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபை இன்று (18) வெளியிட்டுள்ள அறிக்கையில், லரிஜானியின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஈரான் நாட்டிற்காக அவர் ஆற்றிய சேவைகளையும் பாராட்டியுள்ளது.ஈரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரியான அலி லரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்திருந்தது. ஈரானின் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் மிக முக்கியமான நபராக அவர் விளங்கியதால், அவரது மரணம் தற்போதைய போர்ச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.அலி லரிஜானி, 2025 ஓகஸ்ட் மாதம் ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அத்துடன், அவர் ஈரான் ஜனாதிபதியினதும் மற்றும் மறைந்த ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியினதும் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement