• Apr 30 2026

அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் சரமாரித் தாக்குதல்; முடங்கியது டுபாய் விமான நிலையம்!

shanu / Mar 7th 2026, 11:22 pm
image

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் - அமெரிக்கக் கூட்டணிக்கு இடையேயான போர் ஒரு வாரத்தை எட்டியுள்ள நிலையில், போர்ச் சூழல் கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றுள்ளது. 


ஈரானின் உயர் தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்காமல் ஓயமாட்டோம் என ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் பெரும் போர் வெடித்துள்ளது.


வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் இராணுவ நிலைகளை ஈரான் இலக்கு வைத்துள்ளது. குறிப்பாக கட்டார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பஹ்ரைன் உள்ளிட்ட 7 நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. இதனால் அரேபிய தீபகற்பமே போர்க்களமாக மாறியுள்ளது.


சர்வதேச அளவில் மிக முக்கியமான போக்குவரத்து மையமான டுபாய் சர்வதேச விமான நிலையம் ஈரானின் ட்ரோன் தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே ஒருமுறை தாக்கப்பட்ட நிலையில், விமான சேவைகள் பகுதியளவு சீராகத் தொடங்கின. ஆனால், தற்போது மீண்டும் டுபாய் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.


தாக்குதல் தொடங்கியதும், விமானத்திற்காகக் காத்திருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் பீதியில் அங்கிருந்த ரயில் சுரங்கப் பாதைகளை நோக்கித் தப்பியோடினர். இது தொடர்பான பதற்றமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


பாதுகாப்பு கருதி, டுபாய் விமான நிலையம் தற்போது முழுமையாக மூடப்பட்டுள்ளது. முன்னணி விமான நிறுவனமான எமிரேட்ஸ் (Emirates), தனது சேவைகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இந்த மோதலால் உலக நாடுகளுக்கு இடையேயான வான்வழிப் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்பு போன்ற பொருளாதார நெருக்கடிகளும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.


தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பெரும் பதற்றமும், அச்சமும் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் சரமாரித் தாக்குதல்; முடங்கியது டுபாய் விமான நிலையம் மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் - அமெரிக்கக் கூட்டணிக்கு இடையேயான போர் ஒரு வாரத்தை எட்டியுள்ள நிலையில், போர்ச் சூழல் கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றுள்ளது. ஈரானின் உயர் தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்காமல் ஓயமாட்டோம் என ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் பெரும் போர் வெடித்துள்ளது.வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் இராணுவ நிலைகளை ஈரான் இலக்கு வைத்துள்ளது. குறிப்பாக கட்டார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பஹ்ரைன் உள்ளிட்ட 7 நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. இதனால் அரேபிய தீபகற்பமே போர்க்களமாக மாறியுள்ளது.சர்வதேச அளவில் மிக முக்கியமான போக்குவரத்து மையமான டுபாய் சர்வதேச விமான நிலையம் ஈரானின் ட்ரோன் தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே ஒருமுறை தாக்கப்பட்ட நிலையில், விமான சேவைகள் பகுதியளவு சீராகத் தொடங்கின. ஆனால், தற்போது மீண்டும் டுபாய் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.தாக்குதல் தொடங்கியதும், விமானத்திற்காகக் காத்திருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் பீதியில் அங்கிருந்த ரயில் சுரங்கப் பாதைகளை நோக்கித் தப்பியோடினர். இது தொடர்பான பதற்றமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பாதுகாப்பு கருதி, டுபாய் விமான நிலையம் தற்போது முழுமையாக மூடப்பட்டுள்ளது. முன்னணி விமான நிறுவனமான எமிரேட்ஸ் (Emirates), தனது சேவைகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த மோதலால் உலக நாடுகளுக்கு இடையேயான வான்வழிப் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்பு போன்ற பொருளாதார நெருக்கடிகளும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பெரும் பதற்றமும், அச்சமும் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement