• Nov 24 2025

லண்டனில் ரில்வின் சில்வாவிற்கு எதிராக தீவிர கண்டனப் போராட்டம்; நடுவீதியில் முற்றுகையிடப்பட்ட வாகனம் - பொலிஸார் குவிப்பு

Chithra / Nov 24th 2025, 8:37 am
image



தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான டில்வின் சில்வா லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 


அதன் பொருட்டாக ஒரு கூட்டம், ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிலையில், டில்வின் சில்வாவுக்கு எதிராக தமிழர்கள் நூற்றுகணக்கில் கூடி நேற்றையதினம் போராட்டம்  நடத்தியுள்ளனர். 


அந்த போராட்டத்தையும் மீறி டில்வின் சில்வா கூட்டத்திற்குள் நுழைய முற்பட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


இதன்போது, அவர் உள்ளே சென்ற நிலையில் அங்கிருந்த தமிழர்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. 


இந்நிலையில், குறித்த இடத்தில் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


ரில்வின் சில்வாவின் ஐரோப்பிய சுற்றுப்பயணத்திற்கும், தமிழர் தாயகத்தை இலக்காகக் கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும், தமிழின அழிப்பை மறைக்கும் அரசியல் பொய்ப்பிரசாரத்திற்கும், 

எதிரான கோஷங்களும் கண்டனப் பதாகைகளும் எழுப்பப்பட்டன.


பிரித்தானியத் தமிழர்கள் பெருமளவில் இதில் பங்கேற்று, தமிழர் தன்னாட்சி, தேச உரிமை, மற்றும் தாயக பாதுகாப்பு குறித்த தங்களின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

 

லண்டனில் ரில்வின் சில்வாவிற்கு எதிராக தீவிர கண்டனப் போராட்டம்; நடுவீதியில் முற்றுகையிடப்பட்ட வாகனம் - பொலிஸார் குவிப்பு தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான டில்வின் சில்வா லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அதன் பொருட்டாக ஒரு கூட்டம், ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிலையில், டில்வின் சில்வாவுக்கு எதிராக தமிழர்கள் நூற்றுகணக்கில் கூடி நேற்றையதினம் போராட்டம்  நடத்தியுள்ளனர். அந்த போராட்டத்தையும் மீறி டில்வின் சில்வா கூட்டத்திற்குள் நுழைய முற்பட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.இதன்போது, அவர் உள்ளே சென்ற நிலையில் அங்கிருந்த தமிழர்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், குறித்த இடத்தில் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.ரில்வின் சில்வாவின் ஐரோப்பிய சுற்றுப்பயணத்திற்கும், தமிழர் தாயகத்தை இலக்காகக் கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும், தமிழின அழிப்பை மறைக்கும் அரசியல் பொய்ப்பிரசாரத்திற்கும், எதிரான கோஷங்களும் கண்டனப் பதாகைகளும் எழுப்பப்பட்டன.பிரித்தானியத் தமிழர்கள் பெருமளவில் இதில் பங்கேற்று, தமிழர் தன்னாட்சி, தேச உரிமை, மற்றும் தாயக பாதுகாப்பு குறித்த தங்களின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். 

Advertisement

Advertisement

Advertisement