• Sep 09 2026

பஸ் லலித் வழங்கிய தகவல் - மயானத்திலிருந்து மூன்று துப்பாக்கிகள் மீட்பு

Chithra / Sep 8th 2026, 9:56 am
image


டுபாயில் கைது செய்யப்பட்டு அண்மையில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் லலித் கண்ணங்கர எனப்படும் ‘பஸ் லலித்’ வழங்கிய தகவலின் அடிப்படையில், ஹங்வெல்ல பகுதியில் உள்ள மயானம் ஒன்றிலிருந்து மூன்று துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.


கொழும்பு குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இந்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


மீட்கப்பட்ட ஆயுதங்களில் ரி-56 ரக துப்பாக்கி, ரிப்பீட்டர் ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி ஆகியவை அடங்குகின்றன.


டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்டதைத் தொடர்ந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பஸ் லலித்தை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.


பின்னர் அவர் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன், தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.


இந்நிலையில், சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஹங்வெல்ல மயானத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த மூன்று துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.


மீட்கப்பட்ட ஆயுதங்கள் ஏதேனும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

பஸ் லலித் வழங்கிய தகவல் - மயானத்திலிருந்து மூன்று துப்பாக்கிகள் மீட்பு டுபாயில் கைது செய்யப்பட்டு அண்மையில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் லலித் கண்ணங்கர எனப்படும் ‘பஸ் லலித்’ வழங்கிய தகவலின் அடிப்படையில், ஹங்வெல்ல பகுதியில் உள்ள மயானம் ஒன்றிலிருந்து மூன்று துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.கொழும்பு குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இந்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.மீட்கப்பட்ட ஆயுதங்களில் ரி-56 ரக துப்பாக்கி, ரிப்பீட்டர் ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி ஆகியவை அடங்குகின்றன.டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்டதைத் தொடர்ந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பஸ் லலித்தை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.பின்னர் அவர் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன், தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.இந்நிலையில், சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஹங்வெல்ல மயானத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த மூன்று துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.மீட்கப்பட்ட ஆயுதங்கள் ஏதேனும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement