இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் அனில் மேனன், அடுத்த வாரம் தனது முதல் விண்வெளி நடைப்பயணத்தை (Spacewalk) மேற்கொள்ள உள்ளார்.
கேரளாவின் பாலக்காடு பூர்வீகத்தைச் சேர்ந்த அனில் மேனன், நாசா விண்வெளி வீராங்கனை ஜெசிகா மேயருடன் இணைந்து ஆகஸ்ட் 6 முதல் மூன்று விண்வெளி நடைப்பயணங்களில் பங்கேற்கவுள்ளார்.
இந்த விண்வெளி நடைப்பயணங்களின் போது, சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) வெளிப்புற பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிறுவப்படவுள்ள IROSA (International Space Station Roll-Out Solar Array) எனப்படும் புதிய சுருட்டி விரியும் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவதற்கான முன்னேற்பாடுகளையும் அனில் மேனன் மேற்கொள்ள உள்ளார்.
இந்த புதிய சூரிய மின்தகடுகள், சர்வதேச விண்வெளி நிலையத்தின் மின்சார உற்பத்தித் திறனை அதிகரித்து, எதிர்கால அறிவியல் ஆய்வுகளுக்கு கூடுதல் சக்தியை வழங்கும் என நாசா தெரிவித்துள்ளது.
மருத்துவராகவும், விமானப் பொறியாளராகவும் பணியாற்றிய அனில் மேனன், தற்போது நாசாவின் முக்கிய விண்வெளி வீரர்களில் ஒருவராக விளங்குகிறார். அவரது முதல் விண்வெளி நடைப்பயணம், இந்திய வம்சாவளியினருக்கும் குறிப்பாக கேரள மக்களுக்கும் பெருமை சேர்க்கும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
விண்வெளியில் வரலாறு படைக்கப் போகும் இந்திய வம்சாவளி வீரர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் அனில் மேனன், அடுத்த வாரம் தனது முதல் விண்வெளி நடைப்பயணத்தை (Spacewalk) மேற்கொள்ள உள்ளார்.கேரளாவின் பாலக்காடு பூர்வீகத்தைச் சேர்ந்த அனில் மேனன், நாசா விண்வெளி வீராங்கனை ஜெசிகா மேயருடன் இணைந்து ஆகஸ்ட் 6 முதல் மூன்று விண்வெளி நடைப்பயணங்களில் பங்கேற்கவுள்ளார்.இந்த விண்வெளி நடைப்பயணங்களின் போது, சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) வெளிப்புற பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிறுவப்படவுள்ள IROSA (International Space Station Roll-Out Solar Array) எனப்படும் புதிய சுருட்டி விரியும் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவதற்கான முன்னேற்பாடுகளையும் அனில் மேனன் மேற்கொள்ள உள்ளார்.இந்த புதிய சூரிய மின்தகடுகள், சர்வதேச விண்வெளி நிலையத்தின் மின்சார உற்பத்தித் திறனை அதிகரித்து, எதிர்கால அறிவியல் ஆய்வுகளுக்கு கூடுதல் சக்தியை வழங்கும் என நாசா தெரிவித்துள்ளது.மருத்துவராகவும், விமானப் பொறியாளராகவும் பணியாற்றிய அனில் மேனன், தற்போது நாசாவின் முக்கிய விண்வெளி வீரர்களில் ஒருவராக விளங்குகிறார். அவரது முதல் விண்வெளி நடைப்பயணம், இந்திய வம்சாவளியினருக்கும் குறிப்பாக கேரள மக்களுக்கும் பெருமை சேர்க்கும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.