• May 24 2026

யாழ் கடலில் கைதான இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியல்!

Ziya / Jan 7th 2026, 6:01 pm
image

இலங்கை கடற்பரப்பான நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 23 மீனவர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கறியில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளது.


டிசம்பர் 27 ஆம் திகதி, ஜனவரி 2 மற்றும் ஜனவரி 3 ஆகிய திகதிகளில் கைதான மீனவர்களுக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


இன்று காலை சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். 


குறித்த வழக்கினை யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள் நெறிப்படுத்தினார்கள். 


இதன்போது இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாழ் கடலில் கைதான இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியல் இலங்கை கடற்பரப்பான நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 23 மீனவர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கறியில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளது.டிசம்பர் 27 ஆம் திகதி, ஜனவரி 2 மற்றும் ஜனவரி 3 ஆகிய திகதிகளில் கைதான மீனவர்களுக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.இன்று காலை சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். குறித்த வழக்கினை யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள் நெறிப்படுத்தினார்கள். இதன்போது இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement