• May 19 2026

நெடுந்தீவு - குறிகாட்டுவான் படகு சேவை தடைப்படும் நிலையில்?

Chithra / May 19th 2026, 11:42 am
image

நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சீரான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த இரண்டு தனியார் படகுகளும் தற்போது பழுதடைந்துள்ளதாக தெரியவருகின்றது. 


நேற்றுமுன்தினம்  முதல் கரிகணன் படகு பழுதடைந்ததினால், மற்றைய தனியார் படகு காலை மற்றும் மாலை பயணிகள் சேவையை சீராக வழங்கி வந்தது.


இந்த நிலையில் குறித்த தனியார் படகினுள் நேற்று மாலைநேர சேவையின் போது நீர் கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை நேற்றுமுன்தினம் தொடக்கம் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதுடன் கடலும் கொந்தளிப்பாக காணப்படுகின்றது. 


இதேவேளை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 03 படகுகளும் திருத்த வேலைகளுக்கான தீவைவிட்டு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இரு தனியார் படகுகளே சீரான சேவையினை செய்து வருகின்றன.


இது விடயமாக உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா என்பதே நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நெடுந்தீவு - குறிகாட்டுவான் படகு சேவை தடைப்படும் நிலையில் நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சீரான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த இரண்டு தனியார் படகுகளும் தற்போது பழுதடைந்துள்ளதாக தெரியவருகின்றது. நேற்றுமுன்தினம்  முதல் கரிகணன் படகு பழுதடைந்ததினால், மற்றைய தனியார் படகு காலை மற்றும் மாலை பயணிகள் சேவையை சீராக வழங்கி வந்தது.இந்த நிலையில் குறித்த தனியார் படகினுள் நேற்று மாலைநேர சேவையின் போது நீர் கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை நேற்றுமுன்தினம் தொடக்கம் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதுடன் கடலும் கொந்தளிப்பாக காணப்படுகின்றது. இதேவேளை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 03 படகுகளும் திருத்த வேலைகளுக்கான தீவைவிட்டு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இரு தனியார் படகுகளே சீரான சேவையினை செய்து வருகின்றன.இது விடயமாக உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா என்பதே நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement