கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த 11ஆம் திகதி அதிகாலை விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த பயணிகளின் பயணப் பொதிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஏனைய பொருட்கள் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அடையாளத்தை உறுதிப்படுத்துவதன் ஊடாக குறித்த பொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமென கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் வஜிர ரத்நாயக்க தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்தில் பிரதேச மக்களின் உதவியுடன் கண்டெடுக்கப்பட்ட 35 கையடக்க தொலைபேசிகள்,
பயணப் பொதிகள் மற்றும் ஏனைய பொருட்கள் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பேருந்து நடத்துனரின் டிக்கெட் புத்தகமும், பணமும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, இந்த டிக்கெட் புத்தகத்தைத் தேடி பொலிஸார், இராணுவம் மற்றும் கிராம மக்கள் பல இடங்களில் தேடியும், இன்றுவரை அது கிடைக்கவில்லை.
சாரதி மரணமடைந்துள்ளதோடு, நடத்துனரும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதன் காரணமாக விபத்து நடந்த நேரத்தில் எத்தனை பயணிகள் பேருந்துக்குள் இருந்தார்கள் என்பதை சரியாகக் கூற முடியாது எனவும் பொலிஸ் பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டினார்.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்களில் 23 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பேருந்து விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு பரிந்துரைகளை சமர்ப்பித்ததற்காக பொலிஸாரால் நியமிக்கப்பட்ட குழு நேற்று விபத்து நடந்த இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
விபத்து நடந்த இடத்தை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி ருவன் குணசேகர உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
பின்னர், கொத்மலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று விபத்துக்குள்ளான பேருந்தை ஆய்வு செய்தனர்.
கெரண்டி எல்ல பேருந்து விபத்து; 35 கையடக்க தொலைபேசிகள் பொலிஸ் நிலையத்தில் கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த 11ஆம் திகதி அதிகாலை விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த பயணிகளின் பயணப் பொதிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஏனைய பொருட்கள் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அடையாளத்தை உறுதிப்படுத்துவதன் ஊடாக குறித்த பொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமென கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் வஜிர ரத்நாயக்க தெரிவித்தார். விபத்து நடந்த இடத்தில் பிரதேச மக்களின் உதவியுடன் கண்டெடுக்கப்பட்ட 35 கையடக்க தொலைபேசிகள், பயணப் பொதிகள் மற்றும் ஏனைய பொருட்கள் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். இதேவேளை, பேருந்து நடத்துனரின் டிக்கெட் புத்தகமும், பணமும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதன்படி, இந்த டிக்கெட் புத்தகத்தைத் தேடி பொலிஸார், இராணுவம் மற்றும் கிராம மக்கள் பல இடங்களில் தேடியும், இன்றுவரை அது கிடைக்கவில்லை.சாரதி மரணமடைந்துள்ளதோடு, நடத்துனரும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதன் காரணமாக விபத்து நடந்த நேரத்தில் எத்தனை பயணிகள் பேருந்துக்குள் இருந்தார்கள் என்பதை சரியாகக் கூற முடியாது எனவும் பொலிஸ் பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டினார். கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்களில் 23 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் பேருந்து விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு பரிந்துரைகளை சமர்ப்பித்ததற்காக பொலிஸாரால் நியமிக்கப்பட்ட குழு நேற்று விபத்து நடந்த இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. விபத்து நடந்த இடத்தை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி ருவன் குணசேகர உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர், கொத்மலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று விபத்துக்குள்ளான பேருந்தை ஆய்வு செய்தனர்.