• Aug 24 2025

அஸ்வெசும விண்ணப்பதாரர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

Chithra / Aug 23rd 2025, 8:04 am
image

 

இலங்கையில் மூன்றில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நலத்திட்ட உதவிகளுக்காக விண்ணப்பித்திருப்பதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம் அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 37 இலட்சம் குடும்பங்கள் அஸ்வெசும பெற விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இலங்கையில் மொத்தமாக 52 இலட்சம் குடும்பங்கள் வாழும் நிலையில் அஸ்வெசும நலத்திட்டத்திற்காக மூன்றில் இரண்டு குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன.

எனினும் அதில் 19 இலட்சம் குடும்பங்கள் மட்டுமே அஸ்வெசும பெறத் தகுதியானவை என்றும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டு மில்லியன் ஏழைக் குடும்பங்களை மேம்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

அஸ்வெசும விண்ணப்பதாரர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்  இலங்கையில் மூன்றில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நலத்திட்ட உதவிகளுக்காக விண்ணப்பித்திருப்பதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.அதன் பிரகாரம் அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 37 இலட்சம் குடும்பங்கள் அஸ்வெசும பெற விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.இலங்கையில் மொத்தமாக 52 இலட்சம் குடும்பங்கள் வாழும் நிலையில் அஸ்வெசும நலத்திட்டத்திற்காக மூன்றில் இரண்டு குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன.எனினும் அதில் 19 இலட்சம் குடும்பங்கள் மட்டுமே அஸ்வெசும பெறத் தகுதியானவை என்றும் தெரிய வந்துள்ளது.இந்நிலையில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டு மில்லியன் ஏழைக் குடும்பங்களை மேம்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement