• Jun 22 2026

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை

IMF
Chithra / Jun 21st 2026, 8:21 am
image


சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

 

அதன்படி, அவர்கள் எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் தங்கியிருந்து இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

 

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் ஈவன் பெபஜோர்ஜியு (Evan Papageorgiou) உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த பயணத்தில் இணையவுள்ளனர்.


இந்த விஜயத்தின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கையின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சியை மதிப்பீடு செய்யவும், இலங்கையின் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடவும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். அதன்படி, அவர்கள் எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் தங்கியிருந்து இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் ஈவன் பெபஜோர்ஜியு (Evan Papageorgiou) உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த பயணத்தில் இணையவுள்ளனர்.இந்த விஜயத்தின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கையின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சியை மதிப்பீடு செய்யவும், இலங்கையின் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடவும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement