• May 20 2025

மின் கட்டணத்தை அதிகரித்தால் நீதிமன்றம் செல்வோம்! அரசை எச்சரிக்கும் பிரதான எதிர்க்கட்சி

Chithra / May 19th 2025, 8:55 am
image

 

மின்சாரக் கட்டணத்தை 18.3 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு மின்சாரசபை முன்வைத்துள்ள நியாயமற்ற கோரிக்கை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு தெளிவுபடுத்துவோம். அது மாத்திரமின்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மின் கட்டணத்தை 18.3 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கத்தால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னர் 30 சதவீதத்தால் மின் கட்டணம் குறைக்கப்படும் எனக் கூறிய தேசிய மக்கள் சக்தி தான், இன்று கட்டண அதிகரிப்பிற்கான யோசனையை முன்வைத்துள்ளது.

கடந்த காலங்களில் ஊழல், மோசடிகள் அதிகரித்துள்ளமையினாலேயே மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதாகக் கூறினர். அவ்வாறெனில் தற்போது மீண்டும் ஊழல் அதிகரித்துள்ளதா?

ரணில் விக்கிரமசிங்க ஆட்சி காலத்தில் பல பில்லியன் இலாபமீட்டிய மின்சாரசபை தற்போது நஷ்டமடைந்துள்ளமைக்கான காரணம் என்ன? 

18 சதவீதத்தால் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

தமது பலவீனமான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் மீது பழி சுமத்தக் கூடாது.

மின்சாரசபையின் இந்த நியாயமற்ற கோரிக்கை தொடர்பில் நாம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு தெளிவுபடுத்துவோம். 

அது மாத்திரமின்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக நாம் முன்னிற்போம். என்றார்.

மின் கட்டணத்தை அதிகரித்தால் நீதிமன்றம் செல்வோம் அரசை எச்சரிக்கும் பிரதான எதிர்க்கட்சி  மின்சாரக் கட்டணத்தை 18.3 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு மின்சாரசபை முன்வைத்துள்ள நியாயமற்ற கோரிக்கை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு தெளிவுபடுத்துவோம். அது மாத்திரமின்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,மின் கட்டணத்தை 18.3 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கத்தால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னர் 30 சதவீதத்தால் மின் கட்டணம் குறைக்கப்படும் எனக் கூறிய தேசிய மக்கள் சக்தி தான், இன்று கட்டண அதிகரிப்பிற்கான யோசனையை முன்வைத்துள்ளது.கடந்த காலங்களில் ஊழல், மோசடிகள் அதிகரித்துள்ளமையினாலேயே மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதாகக் கூறினர். அவ்வாறெனில் தற்போது மீண்டும் ஊழல் அதிகரித்துள்ளதாரணில் விக்கிரமசிங்க ஆட்சி காலத்தில் பல பில்லியன் இலாபமீட்டிய மின்சாரசபை தற்போது நஷ்டமடைந்துள்ளமைக்கான காரணம் என்ன 18 சதவீதத்தால் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.தமது பலவீனமான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் மீது பழி சுமத்தக் கூடாது.மின்சாரசபையின் இந்த நியாயமற்ற கோரிக்கை தொடர்பில் நாம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு தெளிவுபடுத்துவோம். அது மாத்திரமின்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக நாம் முன்னிற்போம். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement