• May 24 2026

"நான் இருக்கேன், குற்றவாளிகள் தப்ப முடியாது" - கோவை சிறுமி குடும்பத்துக்கு விஜய் ஆறுதல்

Chithra / May 24th 2026, 2:16 pm
image

இந்தியா - தமிழ்நாடு - கோவையை அடுத்த சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 


மேலும், சிறுமிக்கு நேர்ந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இதுதொடர்பாக தமிழக முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:


10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை செய்து படுகொலைக்கு ஆளான சிறுமியின் பெற்றோருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் முதலமைச்சர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். 


அப்போது, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.


இதன்போது 'நான் இருக்கேன் கவலைப்பாதிங்க. இதுபோன்றவர்களை தண்டிக்கத் தான்  நான் வந்திருக்கேன்' என முதல்வர் விஜய் பெற்றோருக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.


மேலும், அமைச்சர்கள் விஜய் தமிழன், சம்பத் குமார் ஆகியோர் சிறுமியின் பெற்றோரை சந்தித்து  7 லட்சம் ரூபாவுக்கான காசோலையை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


"நான் இருக்கேன், குற்றவாளிகள் தப்ப முடியாது" - கோவை சிறுமி குடும்பத்துக்கு விஜய் ஆறுதல் இந்தியா - தமிழ்நாடு - கோவையை அடுத்த சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், சிறுமிக்கு நேர்ந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக தமிழக முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை செய்து படுகொலைக்கு ஆளான சிறுமியின் பெற்றோருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் முதலமைச்சர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். அப்போது, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.இதன்போது 'நான் இருக்கேன் கவலைப்பாதிங்க. இதுபோன்றவர்களை தண்டிக்கத் தான்  நான் வந்திருக்கேன்' என முதல்வர் விஜய் பெற்றோருக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.மேலும், அமைச்சர்கள் விஜய் தமிழன், சம்பத் குமார் ஆகியோர் சிறுமியின் பெற்றோரை சந்தித்து  7 லட்சம் ரூபாவுக்கான காசோலையை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Advertisement

Advertisement