• Apr 27 2026

கச்சதீவு செல்ல குறிகாட்டுவானில் குவிந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள்; படகுகள் இல்லாது வெயிலில் காத்திருந்த அவலம்

Chithra / Feb 27th 2026, 2:21 pm
image

 

கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்வதற்காக குறிகட்டுவான் சென்றவர்கள் காலை 10.30 மணி முதல் படகுகள் இல்லாது பல மணிநேரம் வெயிலில் காத்திருந்த அவலநிலை ஏற்பட்டது.


கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.


இந்நிலையில் கச்சதீவு செல்வதற்காக குறிகாட்டுவான் இறங்குதுறையில் பல நூற்றுக்கணக்கானவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.


கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து இன்று காலை 5.00 மணி முதல் பி.ப 02.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.


இந்நிலையில் இன்று பிற்பகல் பி.ப 2.00 மணிக்கு பின்னர் கச்சதீவிற்கான கடற்போக்குவரத்து சேவை இடம்பெறமாட்டாது என்பதனால் யாத்திரிகர்கள் குறித்த நேரத்திற்கு முன்னர் தமது பயணத்தினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.


குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம்  1200 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இது இப்படி இருக்க கச்சதீவு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக குறிகட்டுவான் சென்றவர்கள் காலை 10.30 மணி முதல் படகுகள் இல்லாது வெயிலில் காத்திருக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


கச்சதீவு செல்ல குறிகாட்டுவானில் குவிந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள்; படகுகள் இல்லாது வெயிலில் காத்திருந்த அவலம்  கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்வதற்காக குறிகட்டுவான் சென்றவர்கள் காலை 10.30 மணி முதல் படகுகள் இல்லாது பல மணிநேரம் வெயிலில் காத்திருந்த அவலநிலை ஏற்பட்டது.கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில் கச்சதீவு செல்வதற்காக குறிகாட்டுவான் இறங்குதுறையில் பல நூற்றுக்கணக்கானவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து இன்று காலை 5.00 மணி முதல் பி.ப 02.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.இந்நிலையில் இன்று பிற்பகல் பி.ப 2.00 மணிக்கு பின்னர் கச்சதீவிற்கான கடற்போக்குவரத்து சேவை இடம்பெறமாட்டாது என்பதனால் யாத்திரிகர்கள் குறித்த நேரத்திற்கு முன்னர் தமது பயணத்தினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம்  1200 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது இப்படி இருக்க கச்சதீவு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக குறிகட்டுவான் சென்றவர்கள் காலை 10.30 மணி முதல் படகுகள் இல்லாது வெயிலில் காத்திருக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement