• Jul 27 2026

“எதுவரை பொறுமை, எதுவரை காத்திருப்பு?' நிலங்களை விடுவிக்கக் கோரி பலாலியில் மக்கள் தொடர் போராட்டம்

Chithra / Jul 26th 2026, 3:23 pm
image


வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றப்படாத மக்களால் பலாலி காணி விடுவிப்பை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று (26) ஆறாவது வாரமாகவும் தொடர்ந்தது.


பலாலி சந்திச் சந்தியில் ஒன்றுகூடிய  மக்கள், தமது சொந்த நிலங்களை உடனடியாக விடுவித்து மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதன்போது, “எங்கள் நிலங்கள் எங்களுடையது தானே, அது எப்படி உங்களுடையதாகும்?”, “எதுவரை பொறுமை, எதுவரை காத்திருப்பு? மீள்குடியேற்றம் எப்போது?” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் தமது உரிமைகளை வலியுறுத்தினர்.


நீண்டகாலமாக தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேற முடியாத நிலையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கும் மக்கள், தங்களின் காணிகளை மீளப்பெற்றுத் தருவதற்கு அரசாங்கமும் உரிய தரப்பினரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தமது நிலங்கள் விடுவிக்கப்படும் வரை போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


“எதுவரை பொறுமை, எதுவரை காத்திருப்பு' நிலங்களை விடுவிக்கக் கோரி பலாலியில் மக்கள் தொடர் போராட்டம் வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றப்படாத மக்களால் பலாலி காணி விடுவிப்பை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று (26) ஆறாவது வாரமாகவும் தொடர்ந்தது.பலாலி சந்திச் சந்தியில் ஒன்றுகூடிய  மக்கள், தமது சொந்த நிலங்களை உடனடியாக விடுவித்து மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது, “எங்கள் நிலங்கள் எங்களுடையது தானே, அது எப்படி உங்களுடையதாகும்”, “எதுவரை பொறுமை, எதுவரை காத்திருப்பு மீள்குடியேற்றம் எப்போது” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் தமது உரிமைகளை வலியுறுத்தினர்.நீண்டகாலமாக தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேற முடியாத நிலையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கும் மக்கள், தங்களின் காணிகளை மீளப்பெற்றுத் தருவதற்கு அரசாங்கமும் உரிய தரப்பினரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.தமது நிலங்கள் விடுவிக்கப்படும் வரை போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement