அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (4) முன்னெடுத்துள்ள 24 மணி நேர அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, கிண்ணியா தள வைத்தியசாலையின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்ததுடன், சிகிச்சைகளுக்காக வருகை தந்த நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
இன்று காலை முதல் ஆரம்பமான இந்தப் போராட்டத்தினால், கிண்ணியா தள வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு (OPD) எவ்வித வைத்திய சேவைகளுமின்றி முடங்கிக் காணப்பட்டன.
தூர இடங்களில் இருந்து வருகை தந்த பல நோயாளர்கள், வைத்தியர்கள் பணியில் இல்லாத காரணத்தினால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதை காணமுடிந்தது.
எனினும், நோயாளர்களின் நலன் கருதி அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அவசர சத்திரசிகிச்சை சேவைகள் மாத்திரம் வழக்கம் போல் இயங்கின.
வைத்தியர்களின் இடமாற்றச் செயல்முறை அரசியல்மயமாக்கப்படுவதாகக் கூறப்படுவதைக் கண்டித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த வாரம் ஏற்கெனவே இரண்டு முறை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இன்று மூன்றாவது தடவையாகவும் முன்னெடுக்கப்படுகின்ற பகிஷ்கரிப்பு காரணமாக, நோயாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பணிப்பகிஷ்கரிப்பால் ஸ்தம்பித்த வைத்தியசாலைகள்; சிகிச்சை பெற வந்து ஏமாற்றத்துடன் திரும்பும் நோயாளர்கள் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (4) முன்னெடுத்துள்ள 24 மணி நேர அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, கிண்ணியா தள வைத்தியசாலையின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்ததுடன், சிகிச்சைகளுக்காக வருகை தந்த நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.இன்று காலை முதல் ஆரம்பமான இந்தப் போராட்டத்தினால், கிண்ணியா தள வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு (OPD) எவ்வித வைத்திய சேவைகளுமின்றி முடங்கிக் காணப்பட்டன. தூர இடங்களில் இருந்து வருகை தந்த பல நோயாளர்கள், வைத்தியர்கள் பணியில் இல்லாத காரணத்தினால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதை காணமுடிந்தது.எனினும், நோயாளர்களின் நலன் கருதி அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அவசர சத்திரசிகிச்சை சேவைகள் மாத்திரம் வழக்கம் போல் இயங்கின.வைத்தியர்களின் இடமாற்றச் செயல்முறை அரசியல்மயமாக்கப்படுவதாகக் கூறப்படுவதைக் கண்டித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த வாரம் ஏற்கெனவே இரண்டு முறை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.இன்று மூன்றாவது தடவையாகவும் முன்னெடுக்கப்படுகின்ற பகிஷ்கரிப்பு காரணமாக, நோயாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.