• May 22 2026

சேவையிலிருந்து விலகிய ஹொரணை - கொழும்பு தனியார் பேருந்துகள்!

Bus
shanu / Jun 25th 2025, 10:30 am
image

ஹொரணை - கொழும்பு  வழித்தடம் இலக்கம் 120 இல் இயங்கும் தனியார் பேருந்துகள் இன்று (25) சேவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளன. 

இது தொடர்பில் ஹொரணை - கொழும்பு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜனக குணசிறி தெரிவிக்கையில், 



வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், முறையான நடைமுறைகளை பின்பற்றாமல், மில்லேவை ஹொரணை வழியாக கொழும்பு வரை புதிய பேருந்து சேவையை ஆரம்பிக்க முயற்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 



வேலைநிறுத்தத்தால் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கு தீர்வு கிடைக்காவிட்டால், எதிர்காலத்தில் ஏனைய வழித்தடத்தையும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். 



கொழும்பு - ஹொரணை பேருந்து சேவையில் பல பிரச்சினைகள் உள்ளதால் அதனை நிவர்த்தி செய்து அதற்கு உரிய தீர்வு வழங்குமாறு  அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேவையிலிருந்து விலகிய ஹொரணை - கொழும்பு தனியார் பேருந்துகள் ஹொரணை - கொழும்பு  வழித்தடம் இலக்கம் 120 இல் இயங்கும் தனியார் பேருந்துகள் இன்று (25) சேவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளன. இது தொடர்பில் ஹொரணை - கொழும்பு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜனக குணசிறி தெரிவிக்கையில், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், முறையான நடைமுறைகளை பின்பற்றாமல், மில்லேவை ஹொரணை வழியாக கொழும்பு வரை புதிய பேருந்து சேவையை ஆரம்பிக்க முயற்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தால் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு கிடைக்காவிட்டால், எதிர்காலத்தில் ஏனைய வழித்தடத்தையும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். கொழும்பு - ஹொரணை பேருந்து சேவையில் பல பிரச்சினைகள் உள்ளதால் அதனை நிவர்த்தி செய்து அதற்கு உரிய தீர்வு வழங்குமாறு  அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement