நாட்டில் உள்ள சில பகுதிகளில் இன்று கனமழை பெய்து வரும் நிலையில் கண்டி - கம்பொல பகுதியில் கனமழை பெய்துள்ளது.
இலங்கைக்கு தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெ்து வருகின்றது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கண்டியின் கம்பொல பகுதியில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட சேவைகளும் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கண்டி - கம்பொலவில் கொட்டித்தீர்த்த கனமழை நாட்டில் உள்ள சில பகுதிகளில் இன்று கனமழை பெய்து வரும் நிலையில் கண்டி - கம்பொல பகுதியில் கனமழை பெய்துள்ளது. இலங்கைக்கு தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெ்து வருகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் கண்டியின் கம்பொல பகுதியில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட சேவைகளும் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.