• May 24 2026

ஹயேஸ் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி தீக்கிரை - இரண்டு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் படுகாயம்!

shanu / Jun 30th 2025, 2:36 pm
image

ஹயேஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும்  நேருக்கு நேர் மோதி தீக்கிரையாகிய விபத்தில் இரண்டு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த ஹயஸ் வாகனம் , பூநகரி  தம்பிராய் பகுதியில்  எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளளது. விபத்தில் இரு வாகனங்களுக்கு தீப்பிடித்து எரிந்துள்ளன. 


விபத்து நிகழ்ந்த வேளை மோட்டார் சைக்கிளில்  பயணித்த மூவர்  எரிகாயங்களுடன் படுகாயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அத்துடன் விபத்து ஏற்படும் போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட தாயும் மகளும் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்தில் இரண்டு சிறுமிகள், இரண்டு பெண்கள், ஒரு ஆண் உட்பட ஐந்து பேரே இவ்வாறு படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர. 


விபத்து தொடர்பில் ஹயேஸ் வாகன சாரதி கைது செய்யப்பட்டார் என்றும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹயேஸ் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி தீக்கிரை - இரண்டு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் படுகாயம் ஹயேஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும்  நேருக்கு நேர் மோதி தீக்கிரையாகிய விபத்தில் இரண்டு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த ஹயஸ் வாகனம் , பூநகரி  தம்பிராய் பகுதியில்  எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளளது. விபத்தில் இரு வாகனங்களுக்கு தீப்பிடித்து எரிந்துள்ளன. விபத்து நிகழ்ந்த வேளை மோட்டார் சைக்கிளில்  பயணித்த மூவர்  எரிகாயங்களுடன் படுகாயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் விபத்து ஏற்படும் போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட தாயும் மகளும் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்தில் இரண்டு சிறுமிகள், இரண்டு பெண்கள், ஒரு ஆண் உட்பட ஐந்து பேரே இவ்வாறு படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர. விபத்து தொடர்பில் ஹயேஸ் வாகன சாரதி கைது செய்யப்பட்டார் என்றும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement