• Aug 23 2025

மாமுனை கடற்கரையில் கைக்குண்டு மீட்பு!

shanuja / Aug 21st 2025, 11:23 pm
image

யாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் இன்று(21) மதியம்  கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.  


மாமுனை கடற்கரை பகுதியில் கைக்குண்டு ஒன்று இருப்பதை  கடற்படையினர் அவதானித்துள்ளனர். 


பின்னர்  உடனடியாக விரைந்து செயற்பட்ட கடற்படையினர், கைக்குண்டை  பாதுகாப்பான முறையில் மீட்டனர். 


மீட்கப்பட்ட கைக் குண்டினை கடற்படையினர் மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இது சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாமுனை கடற்கரையில் கைக்குண்டு மீட்பு யாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் இன்று(21) மதியம்  கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.  மாமுனை கடற்கரை பகுதியில் கைக்குண்டு ஒன்று இருப்பதை  கடற்படையினர் அவதானித்துள்ளனர். பின்னர்  உடனடியாக விரைந்து செயற்பட்ட கடற்படையினர், கைக்குண்டை  பாதுகாப்பான முறையில் மீட்டனர். மீட்கப்பட்ட கைக் குண்டினை கடற்படையினர் மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இது சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement