• Nov 07 2025

தகுதியுடைய அனைவருக்கும் காணி உரிமையை வழங்குக; ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கு ஹட்டனில் கையெழுத்து வேட்டை!

shanuja / Oct 15th 2025, 3:17 pm
image

மலையகத்தில் தகுதியுடைய அனைவருக்கும் காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கையெழுத்து வேட்டை இடம்பெற்றுள்ளது. 


மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் உட்பட காணியை பெறுவதற்கு தகுதி உடைய அனைவருக்கும் நில உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


இதனை வலியுறுத்தி ஹட்டன் பஸ் நிலைய வளாகத்தில் இன்று கையெழுத்து வேட்டை இடம்பெற்றது. 


உரிமை மீட்போம், தலைமுறை காப்போம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற  கையெழுத்து வேட்டையில்,  அமைப்பின் தலைவர் பா.சிவநேசன் உட்பட பல சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர்.  


இதன்போது கருத்துத் தெரிவித்த அமைப்பின் தலைவர் பா.சிவநேசன், 

“பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு நிலம் மற்றும் வீடுகளை வழங்குவது மிகவும் அவசியமானது. இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் முன்னேறும். கையெழுத்து திரட்டப்பட்ட பின் மனு ஜனாதபதியிடம் கையளிக்கப்படும்." என்று தெரிவித்தார்.

தகுதியுடைய அனைவருக்கும் காணி உரிமையை வழங்குக; ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கு ஹட்டனில் கையெழுத்து வேட்டை மலையகத்தில் தகுதியுடைய அனைவருக்கும் காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கையெழுத்து வேட்டை இடம்பெற்றுள்ளது. மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் உட்பட காணியை பெறுவதற்கு தகுதி உடைய அனைவருக்கும் நில உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இதனை வலியுறுத்தி ஹட்டன் பஸ் நிலைய வளாகத்தில் இன்று கையெழுத்து வேட்டை இடம்பெற்றது. உரிமை மீட்போம், தலைமுறை காப்போம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற  கையெழுத்து வேட்டையில்,  அமைப்பின் தலைவர் பா.சிவநேசன் உட்பட பல சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர்.  இதன்போது கருத்துத் தெரிவித்த அமைப்பின் தலைவர் பா.சிவநேசன், “பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு நிலம் மற்றும் வீடுகளை வழங்குவது மிகவும் அவசியமானது. இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் முன்னேறும். கையெழுத்து திரட்டப்பட்ட பின் மனு ஜனாதபதியிடம் கையளிக்கப்படும்." என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement