• May 23 2026

ஆபத்தான நிலையில் அதிக பயணிகளை ஏற்றிவந்த அரச பேருந்து; கிளிநொச்சியில் சம்பவம்

Chithra / Oct 15th 2025, 6:51 pm
image

கிளிநொச்சி - முழங்காவில் பகுதியிலிருந்து இன்று  பகல் 1.30 மணிக்கு கிளிநொச்சி நோக்கு புறப்பட்ட இலங்கை  போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று ஊற்றுப்புலம் சந்திக்கு அப்பால் மிகவும் ஆபத்தான நிலையில் அதிகளவு பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்துள்ளது.

பேருந்துக்குள் மிக அதிகமான பயணிகளை ஏற்றியுள்ளதோடு, பேருந்தின் இரண்டு வாசல்கள் மற்றும் பேருந்து பின்பகுதியான பவர் பகுதியிலும் பயணிகளை ஏற்றிக்கொண்டு குறித்த பேருந்து பயணித்துள்ளது. 

சில மாதங்களுக்கு முன் இவ்வாறு இதே வழி தடத்தில் தனியார் பேருந்து இவ்வாறு பயணிகளை

ஏற்றிக்கொண்டு சென்றதன் காரணமாக குறித்த பேருந்தின் வழி அனுமதி தடம் சில காலங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதோடு, நடத்துநர் மற்றும் சாரதிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என தனியார் பேருந்து சங்கத்தினர் தெரிவித்தனர்.

பொது மக்களின் பாதுகாப்பு கருதி பேருந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் எனவும் பலரும் தெரிவித்துள்ளார்.

ஆபத்தான நிலையில் அதிக பயணிகளை ஏற்றிவந்த அரச பேருந்து; கிளிநொச்சியில் சம்பவம் கிளிநொச்சி - முழங்காவில் பகுதியிலிருந்து இன்று  பகல் 1.30 மணிக்கு கிளிநொச்சி நோக்கு புறப்பட்ட இலங்கை  போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று ஊற்றுப்புலம் சந்திக்கு அப்பால் மிகவும் ஆபத்தான நிலையில் அதிகளவு பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்துள்ளது.பேருந்துக்குள் மிக அதிகமான பயணிகளை ஏற்றியுள்ளதோடு, பேருந்தின் இரண்டு வாசல்கள் மற்றும் பேருந்து பின்பகுதியான பவர் பகுதியிலும் பயணிகளை ஏற்றிக்கொண்டு குறித்த பேருந்து பயணித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் இவ்வாறு இதே வழி தடத்தில் தனியார் பேருந்து இவ்வாறு பயணிகளைஏற்றிக்கொண்டு சென்றதன் காரணமாக குறித்த பேருந்தின் வழி அனுமதி தடம் சில காலங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதோடு, நடத்துநர் மற்றும் சாரதிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என தனியார் பேருந்து சங்கத்தினர் தெரிவித்தனர்.பொது மக்களின் பாதுகாப்பு கருதி பேருந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் எனவும் பலரும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement