• Nov 25 2026

கோட்டாபய ராஜபக்ஷவின் மேன்முறையீட்டு மனு: விசாரணைக்கு திகதி நிர்ணயம்!

Chithra / Nov 25th 2026, 11:45 am
image


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவின் விசாரணைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தது.


மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர்நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.


இந்நிலையில், குறித்த மேன்முறையீட்டு மனு இன்று (25) மஹிந்த சமயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதன்போது, மனு தொடர்பான சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி வழக்கை மீண்டும் அழைக்குமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.


இதற்கமைய, குறித்த மேன்முறையீட்டு மனு மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மார்ச் 5ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷவின் மேன்முறையீட்டு மனு: விசாரணைக்கு திகதி நிர்ணயம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவின் விசாரணைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தது.மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர்நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில், குறித்த மேன்முறையீட்டு மனு இன்று (25) மஹிந்த சமயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, மனு தொடர்பான சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி வழக்கை மீண்டும் அழைக்குமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.இதற்கமைய, குறித்த மேன்முறையீட்டு மனு மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மார்ச் 5ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement