• Aug 21 2025

பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட சிறுமிகள்; 27 பேர் மீட்பு! இந்தியர்கள் ஐவர் கைது!

shanuja / Aug 21st 2025, 2:52 pm
image

பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட சிறுமிகள் உட்பட 27 பேர் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் ஓமாஹா மெட்ரோ பகுதியில் இந்தம் சம்பவம் பதிவாகியுள்ளது. 


இந்தச் சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், 


பாலியல் தொழிலுக்காக பெண்களையும், சிறுமிகளையும் கடத்துவதாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.  


தகவலையடுத்து ஓமாஹா மெட்ரோ பகுதிகளில் உள்ள விடுதிகளில் பொலிஸார் நடத்திய சோதனையில், 12 வயதுக்குட்பட்ட 10 பேர் உட்பட மொத்தம் 27 பெண்கள்  மீட்கப்பட்டனர்.


அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இவர்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வைக்கப்பட்டதும், சிலருக்கு ஊதியமே வழங்கப்படாமல் இருந்ததும் தெரியவந்தது. 


மேலும், சிலர் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐந்து அமெரிக்க வாழ் இந்தியர்களை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இவர்கள் மீது ஆள் கடத்தல், கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், விசா மோசடி, கொள்ளை மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


அதோடு சந்தேகநபர்களிடமிருந்து பெரும் தொகை பணம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்குச் சொந்தமான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட சிறுமிகள்; 27 பேர் மீட்பு இந்தியர்கள் ஐவர் கைது பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட சிறுமிகள் உட்பட 27 பேர் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் ஓமாஹா மெட்ரோ பகுதியில் இந்தம் சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், பாலியல் தொழிலுக்காக பெண்களையும், சிறுமிகளையும் கடத்துவதாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.  தகவலையடுத்து ஓமாஹா மெட்ரோ பகுதிகளில் உள்ள விடுதிகளில் பொலிஸார் நடத்திய சோதனையில், 12 வயதுக்குட்பட்ட 10 பேர் உட்பட மொத்தம் 27 பெண்கள்  மீட்கப்பட்டனர்.அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இவர்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வைக்கப்பட்டதும், சிலருக்கு ஊதியமே வழங்கப்படாமல் இருந்ததும் தெரியவந்தது. மேலும், சிலர் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐந்து அமெரிக்க வாழ் இந்தியர்களை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவர்கள் மீது ஆள் கடத்தல், கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், விசா மோசடி, கொள்ளை மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அதோடு சந்தேகநபர்களிடமிருந்து பெரும் தொகை பணம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்குச் சொந்தமான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement