சகோதரி கைபேசியைத் தர மறுத்ததால், கழுத்து நெரித்துக் கொலை செய்து குளியலறைத் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (28) மாலை, ஏறாவூர் 5ஆம் பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா என்ற சிறுமி, குளியலறைத் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ளார். தந்தையார் சம்பவ தினத்தன்று வேலைக்காக வெளியூர் சென்றிருந்தார்.
இந்த நிலையில் 14 வயது சகோதரனும் 11 வயது சகோதரியும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர்.
அப்போது 'டிக் டொக்' பார்ப்பதற்காகச் சகோதரி வைத்திருந்த கைபேசியைத் தருமாறு சகோதரன் கேட்டுள்ளார். அதற்குச் சகோதரி கொடுக்க மறுக்கவே, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சகோதரன், தன் சகோதரியின் கழுத்தை நெரித்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தன் சகோதரியின் உடலை இழுத்துச் சென்று குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டு, ஒன்றும் தெரியாதது போல வீட்டிலிருந்து பக்கத்து வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அதேநேரம், வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த தந்தை, வீட்டில் பிள்ளைகளைக் காணாமல் தேடியுள்ளார்.
பின்னர் குளியலறைத் தண்ணீர் தொட்டியில் மகள் மயங்கிக் கிடப்பதைக் கண்டு, அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், 14 வயது சிறுவனான சகோதரன் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், அந்தச் சிறுவனே தன் சகோதரியைக் கொலை செய்தார் என்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, குறித்த சிறுவனைக் கைது செய்த பொலிஸார் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பில் குளியலறைக்குள் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி; அண்ணனால் படுகொலை --அதிரவைக்கும் திடீர் திருப்பம் சகோதரி கைபேசியைத் தர மறுத்ததால், கழுத்து நெரித்துக் கொலை செய்து குளியலறைத் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை (28) மாலை, ஏறாவூர் 5ஆம் பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா என்ற சிறுமி, குளியலறைத் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ளார். தந்தையார் சம்பவ தினத்தன்று வேலைக்காக வெளியூர் சென்றிருந்தார். இந்த நிலையில் 14 வயது சகோதரனும் 11 வயது சகோதரியும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர்.அப்போது 'டிக் டொக்' பார்ப்பதற்காகச் சகோதரி வைத்திருந்த கைபேசியைத் தருமாறு சகோதரன் கேட்டுள்ளார். அதற்குச் சகோதரி கொடுக்க மறுக்கவே, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சகோதரன், தன் சகோதரியின் கழுத்தை நெரித்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, தன் சகோதரியின் உடலை இழுத்துச் சென்று குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டு, ஒன்றும் தெரியாதது போல வீட்டிலிருந்து பக்கத்து வீட்டுக்குச் சென்றுள்ளார்.அதேநேரம், வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த தந்தை, வீட்டில் பிள்ளைகளைக் காணாமல் தேடியுள்ளார். பின்னர் குளியலறைத் தண்ணீர் தொட்டியில் மகள் மயங்கிக் கிடப்பதைக் கண்டு, அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.இவ்வாறான நிலையில், 14 வயது சிறுவனான சகோதரன் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், அந்தச் சிறுவனே தன் சகோதரியைக் கொலை செய்தார் என்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.அதனைத் தொடர்ந்து, குறித்த சிறுவனைக் கைது செய்த பொலிஸார் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.