• Jun 30 2026

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிரடியாகக் குறைப்பு

Chithra / Jun 30th 2026, 7:17 am
image


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (Ceypetco) தனது எரிபொருட்களின் விலைகளை திருத்தியமைக்க தீர்மானித்துள்ளது. 


இந்த விலை திருத்தமானது  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, பரவலாகப் பயன்படுத்தப்படும் 92 ரக ஒக்டேன் பெற்றோல் மற்றும் ஓட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.


92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 434 ரூபாயாக காணப்பட்ட லீற்றர் ஒன்றின் புதிய விலை 414 ரூபாவாகும்.


ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 407 ரூபாயாக காணப்பட்ட லீற்றர் ஒன்றின் புதிய விலை 382 ரூபாவாகும்.


இதேவேளை, சந்தையில் உள்ள ஏனைய எரியெண்ணெய் மற்றும் எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது


இதேவேளை,  லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளைத் திருத்தியமைப்பதாக அறிவித்துள்ளது.


இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் திருத்தப்பட்ட எரிபொருள் விலைகளுக்கு அமைவாக, இந்த தமது எரிபொருள் விலையை திருத்துவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிரடியாகக் குறைப்பு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (Ceypetco) தனது எரிபொருட்களின் விலைகளை திருத்தியமைக்க தீர்மானித்துள்ளது. இந்த விலை திருத்தமானது  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, பரவலாகப் பயன்படுத்தப்படும் 92 ரக ஒக்டேன் பெற்றோல் மற்றும் ஓட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 434 ரூபாயாக காணப்பட்ட லீற்றர் ஒன்றின் புதிய விலை 414 ரூபாவாகும்.ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 407 ரூபாயாக காணப்பட்ட லீற்றர் ஒன்றின் புதிய விலை 382 ரூபாவாகும்.இதேவேளை, சந்தையில் உள்ள ஏனைய எரியெண்ணெய் மற்றும் எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளதுஇதேவேளை,  லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளைத் திருத்தியமைப்பதாக அறிவித்துள்ளது.இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் திருத்தப்பட்ட எரிபொருள் விலைகளுக்கு அமைவாக, இந்த தமது எரிபொருள் விலையை திருத்துவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement