• Apr 24 2026

பொலிஸ் வாகனங்களை மோதித்தள்ளிய எரிபொருள் பவுசர்; முல்லைத்தீவில் அதிர்ச்சி!

Chithra / Apr 24th 2026, 11:04 am
image

முல்லைத்தீவு - முள்ளியவளை, மாஞ்சோலை பகுதியில் பொலிஸாரின் வாகனங்கள் மீது எரிபொருள் பவுசர் ஒன்று மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.


முள்ளியவளை மாஞ்சோலை சந்திக்கு முன்பாக பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில், வீதியோரமாக பொலிஸாரின் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.


இதன்போது, அந்த வழியாக வந்த எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் வாகனம், கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதித் தள்ளியுள்ளது.


இந்த விபத்தில் பொலிஸ் முச்சக்கரவண்டி பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.


எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் எவருக்கும் உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பொலிஸ் வாகனங்களை மோதித்தள்ளிய எரிபொருள் பவுசர்; முல்லைத்தீவில் அதிர்ச்சி முல்லைத்தீவு - முள்ளியவளை, மாஞ்சோலை பகுதியில் பொலிஸாரின் வாகனங்கள் மீது எரிபொருள் பவுசர் ஒன்று மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.முள்ளியவளை மாஞ்சோலை சந்திக்கு முன்பாக பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில், வீதியோரமாக பொலிஸாரின் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.இதன்போது, அந்த வழியாக வந்த எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் வாகனம், கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதித் தள்ளியுள்ளது.இந்த விபத்தில் பொலிஸ் முச்சக்கரவண்டி பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் எவருக்கும் உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement