• Jul 01 2026

வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!

shanu / Jun 30th 2026, 11:05 am
image

திருகோணமலை -தி/மூ/ செல்வநகர் அந்நூர் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா பாடசாலை அதிபர் ஜே.எம்.ஜெஸ்மி தலைமையில் இன்று செவ்வாய்கிழமை (30) காலை இடம்பெற்றது.


தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஸான் அக்மீமன முதன்மை அதிதியாக கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல்லை நட்டு வைத்தார்.


கிழக்கு மாகாண விசேட அபிவிருத்தி திட்ட நிதியில் 8 மில்லியன் ரூபாய் செலவில் இவ் வகுப்பறை கட்டிடத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வகுப்பறை கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.


இந்நிகழ்வில் மூதூர் வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.சிராஜ்,சேருவில பிரதேச சபையின் தவிசாளர் துஷார சம்ப,சேருவில பிரதேச சபை உறுப்பினர்கள்களான ஏ.ஜி.ஜர்சான்,எம்.மர்சூக், பிரஜா சக்தி தவிசாளர் எஸ்.டி.ஹிஸாம்,பாடசாலை சமூத்தினர் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா திருகோணமலை -தி/மூ/ செல்வநகர் அந்நூர் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா பாடசாலை அதிபர் ஜே.எம்.ஜெஸ்மி தலைமையில் இன்று செவ்வாய்கிழமை (30) காலை இடம்பெற்றது.தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஸான் அக்மீமன முதன்மை அதிதியாக கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல்லை நட்டு வைத்தார்.கிழக்கு மாகாண விசேட அபிவிருத்தி திட்ட நிதியில் 8 மில்லியன் ரூபாய் செலவில் இவ் வகுப்பறை கட்டிடத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வகுப்பறை கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.இந்நிகழ்வில் மூதூர் வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.சிராஜ்,சேருவில பிரதேச சபையின் தவிசாளர் துஷார சம்ப,சேருவில பிரதேச சபை உறுப்பினர்கள்களான ஏ.ஜி.ஜர்சான்,எம்.மர்சூக், பிரஜா சக்தி தவிசாளர் எஸ்.டி.ஹிஸாம்,பாடசாலை சமூத்தினர் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement