• Jul 09 2026

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வழக்கு ஒத்திவைப்பு

Chithra / Jul 8th 2026, 6:17 pm
image


அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு, சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இவ்விசாரணை இன்று (08) கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்தத் திகதியை நிர்ணயித்தது.


இன்றைய வழக்கு விசாரணையின் போது, குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, இந்தச் சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் அனைத்தும் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தனர். 


மேலும், அது தொடர்பான சுருக்கக் கோப்புகள் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.


இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் விபரங்களை முன்வைத்த சிரேஷ்ட அரச சட்டத்தரணி சமதரி பியசேன, கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதால், அது குறித்த இறுதி நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்கு ஏதுவானதொரு திகதியை வழங்குமாறு நீதவானிடம் கோரினார்.


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, இந்த வழக்குக்கு அடிப்படையாக அமைந்த மொத்தத் தொகையில் பாதியளவு வாகனப் பயன்பாட்டிற்காகவே செலவிடப்பட்டுள்ளதாகப் புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

 

எனினும், இக்குற்றச்சாட்டை மறுத்த அவர்: “எனது கட்சிக்காரரின் குறிப்பிட்ட அந்தப் பயணத்தின் போது, பிரித்தானிய அரசாங்கமே அவருக்கு வாகனங்களை வழங்கியிருந்தது. அது தொடர்பாகப் பிரித்தானிய அரசாங்கம் பின்பற்றிய உத்தியோகபூர்வ நடைமுறைகள் அடங்கிய ஆவணங்களை நாங்கள் தற்போது அரச சட்டத்தரணியிடம் ஒப்படைத்துள்ளோம். எனவே, இந்த ஆவணங்கள் குறித்தும் சிஐடி அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்தார்.


இருதரப்பு முன்வைப்புகளைப் பரிசீலித்த நீதவான் பசன் அமரசேன, இந்த முறைப்பாட்டை மீண்டும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டார்.


அன்றைய தினம் இவ்வழக்குத் தொடர்பில் சட்டமா அதிபர் எடுக்கவுள்ள சட்ட நடவடிக்கை மற்றும் அவரது இறுதி நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்குத் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் அரச சட்டத்தரணிக்கு நீதவான் உத்தரவிட்டார்.


கடந்த 2023 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சென்றிருந்தார்.


இதன்போது, தனது தனிப்பட்ட பயணத்திற்காக 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிக அரசுப் பணத்தைச் செலவிட்டதன் மூலம் அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

 

இக்குற்றச்சாட்டின் கீழ், ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது செயலாளராகக் கடமையாற்றிய சமன் ஏக்கநாயக்க ஆகியோர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வழக்கு ஒத்திவைப்பு அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு, சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்விசாரணை இன்று (08) கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்தத் திகதியை நிர்ணயித்தது.இன்றைய வழக்கு விசாரணையின் போது, குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, இந்தச் சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் அனைத்தும் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், அது தொடர்பான சுருக்கக் கோப்புகள் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் விபரங்களை முன்வைத்த சிரேஷ்ட அரச சட்டத்தரணி சமதரி பியசேன, கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதால், அது குறித்த இறுதி நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்கு ஏதுவானதொரு திகதியை வழங்குமாறு நீதவானிடம் கோரினார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, இந்த வழக்குக்கு அடிப்படையாக அமைந்த மொத்தத் தொகையில் பாதியளவு வாகனப் பயன்பாட்டிற்காகவே செலவிடப்பட்டுள்ளதாகப் புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். எனினும், இக்குற்றச்சாட்டை மறுத்த அவர்: “எனது கட்சிக்காரரின் குறிப்பிட்ட அந்தப் பயணத்தின் போது, பிரித்தானிய அரசாங்கமே அவருக்கு வாகனங்களை வழங்கியிருந்தது. அது தொடர்பாகப் பிரித்தானிய அரசாங்கம் பின்பற்றிய உத்தியோகபூர்வ நடைமுறைகள் அடங்கிய ஆவணங்களை நாங்கள் தற்போது அரச சட்டத்தரணியிடம் ஒப்படைத்துள்ளோம். எனவே, இந்த ஆவணங்கள் குறித்தும் சிஐடி அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்தார்.இருதரப்பு முன்வைப்புகளைப் பரிசீலித்த நீதவான் பசன் அமரசேன, இந்த முறைப்பாட்டை மீண்டும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டார்.அன்றைய தினம் இவ்வழக்குத் தொடர்பில் சட்டமா அதிபர் எடுக்கவுள்ள சட்ட நடவடிக்கை மற்றும் அவரது இறுதி நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்குத் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் அரச சட்டத்தரணிக்கு நீதவான் உத்தரவிட்டார்.கடந்த 2023 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சென்றிருந்தார்.இதன்போது, தனது தனிப்பட்ட பயணத்திற்காக 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிக அரசுப் பணத்தைச் செலவிட்டதன் மூலம் அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இக்குற்றச்சாட்டின் கீழ், ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது செயலாளராகக் கடமையாற்றிய சமன் ஏக்கநாயக்க ஆகியோர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement