சிகிரியா, பிதுரங்கல வீதியில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 68 வயதுடைய ஹங்கேரி நாட்டுப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபரும் அவரது மனைவியும் சீகிரியா - பிதுரங்கல வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போதே, இந்தக் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பலி சிகிரியாவில் சோகம் சிகிரியா, பிதுரங்கல வீதியில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் 68 வயதுடைய ஹங்கேரி நாட்டுப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த நபரும் அவரது மனைவியும் சீகிரியா - பிதுரங்கல வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போதே, இந்தக் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.