கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களை தமிழ் தேசிய பேரவை அங்கத்தவர்கள் இன்றைய தினம் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அதன்பின்னர் பல்வேறு விடயங்களை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினர்.
அதில் ஒரு முக்கிய விடயம் தொடர்பாக பாரளுமன்ற உறுப்பினர் கயேந்திரகுமார் தெரிவிக்கையில்
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனேடிய உயர்ஸ்தானியர் எரிக் வோல்ஸை இன்றையதினம் வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து உத்தியோக பூர்வமாக இலங்கை அரசாங்கத்தினுடைய கண்டனங்களை கனேடிய அரசாங்கத்திற்கு தெரிவித்திருக்கின்றார்.
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் ஞாபகார்த்தமாக நினைவுத்தூபி அங்கு திறக்கப்பட்ட நிலையில் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்திருக்கின்றார்
எந்தவித ஆதாரமும் இல்லாத இடத்தில் கனேடிய அரசாங்கம் இவ்வகையான ஒரு இனப்படுகொலைக்கான தூபி என்று அமைப்பதனை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
ஜதார்த்தத்தில் திட்டமிட்ட வகையிலே கடந்த 70 வருடங்களுக்கு மேலாக வடகிழக்கிலே
இருக்ககூடிய தமிழ்த்தேச அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கபட்டிருக்கின்றன என்பது நிரூபிக்கபடக்கூடியதொரு விடயம்
அந்தப்பின்னணியில் தமிழ் மக்கள் தங்களுடைய இருப்பை உறுதிப்டுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் தங்களுடைய நிலப்பரப்புக்ளை தாங்களே ஆளக்கூடிய ஒரு தீர்வைக் கேட்டிருக்கின்ற இடத்திலே அதை மறுத்து ஒர பாரியளவிற்கான குடியேற்றங்கனளை நடத்தி, வடகிழக்கு தமிழ் என்று சொல்ல முடியாதளவிற்கு ஒரு குடியேற்றங்களும் கட்டமைப்பு சார்ந்த இன அழிப்பும் அமைக்க தமிழர்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு ஆயுதமேந்தினர்
அந்த போராட்டங்களை அழிப்பதற்கு 30 வருடங்களுக்கு மேலாக ஏலாத இடத்தில ஒரு இனப்படுகொலை செய்வதன் ஊடாக இந்த போராட்டத்தை அழிக்க வேண்டும் என்ற விதத்திலே இறுதியில் போராட்டம் மௌனிக்கப்பட்டது.
அந்த போராட்டங்கள் மௌனிக்கப்ட்ட விதங்கள் தொடர்பாக பல ஆதாரங்கள் சர்வதேச மட்டத்திலே வெளிவந்திருக்கின்றன
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சேவை இந்த ஆதாரங்களை தொடர்சியாக வெளியிட்டிருக்கின்றன
அதுமட்டுமல்லாமல் இன்றைக்கு ஜநா மனிதஉரிமைகள் பேரவையிலே சர்வதேச மட்டங்களிலே இன்டைக்கு இருக்ககூடிய ஆதாரங்களோடு உத்தியோகபூர்வமான ஜநா மனித உரிமைப் பேரவையினுடைய மனித உரிமைக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் அங்கு போர்க்குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் உறுதிப்பட நடைபெற்றிருப்பதாக முடிவும் எடுகப்பட்டிருக்கின்றது
அந்த அடிப்படையில்தான் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்ட இனப்படுகொலை என்று சொல்லுகின்ற இடத்தில அந்த இனப்படுகொலையை விசாரிப்பதற்கு கூட தயாரில்லாத இலங்கை அரசு ஆதாரங்கள் இல்லை என்று சொல்வது கேலிக்கூத்தான ஒரு விடயம்
அதனை சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொள்ள தாயாரில்லாத விடயம் இன்டைக்கு ஆதாரங்கள் இல்லை அப்படி எதுவும் நடக்கவில்லை என்ற சொல்லுகின்ற இலங்கை அரசு உண்மையிலேயே தாங்கள் எதுக்குமே பயப்படத் தேவையில்லை என்றால் சர்வதேச குற்றவியல் விசாரணையை நடத்துவதற்கு ஒத்துழைப்பு தந்து தங்களுடைய நேர்மைத்தன்மையை, பொய்க்குற்றச்சாட்டுக்களுக்கு தொடர்பில்லை என்பதை நிரூபிக்கலாம்
அதைச் செய்யாமல் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இணங்காமல் அவர்கள் அந்த விசாரைணகளை நடக்கவிடாமல் தட்டிக்கழித்து வருவது இந்த விடயங்கள் நடக்கவில்லை என்று கூறுவது ஏற்கத்தக்க விடயமல்ல
கனேடிய அரசாங்கம் ஆரம்பத்திலேயே தங்களுடைய செயற்பாடுகள் ஊடகவும் கருத்துக்கள் ஊடாகவும் இனப்படுகொலை என்ற விடயங்களை பெரிதளவில் ஏற்றுக் கொள்வில்லை ஆனால் காலம் போக போக ஆதாரங்கள் வெளிவரவர இன்றைக்கு தவிர்க்கமுடியாத உண்மையை ஏற்கவேண்டிய இடத்திற்கு தள்ளப்ட்டுள்ளார்கள் என்பது ஜதார்த்தம்
புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழ்கின்ற இடத்தில் அந்த ஆதாரங்களை இலங்கை அரசு மட்டும்தன் மறுத்துக்கொண்டு இருக்கும்
ஆனால் இலங்கை அரசு போர் முடிவடைந்து 16 வருடங்கள் எந்தளவிற்கு தனிமைப்பட்டுக்கொண்டு போயிருக்கின்றது என்று தெரிகிறதே தவிர மாறி அந்த போரை வெண்டதற்கு பிறகு தங்களுடைய நாடும் தங்களுடைய அரசும் சர்வதேசமட்டத்திலே ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையிலே இல்லை
அந்த வகையிலே கனேடியா வாழ் ஈழத்தமிழர்களுக்கு தாயகத்தில் தொடர்ந்தும் தமிழ் இனப்டுகொலைக்கு சர்வதேச விசாரணையை தொடர்ந்தும் கோருகின்ற தரப்பு என்ற வகையிலையும், தமிழ் மக்களுடைய தேச அந்தஸ்தை இன அழிப்பின் உடாக அழிக்கின்ற செயலை கடுமையாக எதிர்த்து அதற்கு ஒரு நிரந்தர தீர்விற்கு தமிழ்த் தேசம் அங்கீகரிக்க வேண்டும், தமிழர் தாயகத்திலே சமஸ்டி ஆட்சிமுறையினை கோருகின்ற ஒர தரப்பு என்ற வகையிலே தமிழத் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் தேசிய பேரவையும் கனேடிய வாழ் தமிழ் ஈழ மக்களுக்கு நாங்கள் தலைவணங்கி நன்றி கூறுவதோடு கனேடிய அரசாங்கத்திற்கு ஜனநாயகாத்திற்கும் உண்மைக்கும் இடமளிப்பதன் ஊடாக அந்த நினைவுத் தூபியை கட்டுவதற்கு அனுமதியை வழங்கியதற்கு அவர்களுக்கு எமது நன்றியையும் பாராட்டுக்களையும் பதிவ செய்ய விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் தமிழ் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொ. ஜங்கரநேசன் , ந. சிறீகாந்தா, ஈ.சரவணபவான், செல்வராசா கஜேந்திரன் , ஆகியோர் கலந்து கொண்டனர் .
கனடாவில் வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுச் சின்னத்தால் கடுப்பாகிய வெளிவிவகார அமைச்சர்; தூதுவரை அழைத்து கண்டனம்- பதில் கொடுத்த தமிழ்த் தேசிய பேரவை கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களை தமிழ் தேசிய பேரவை அங்கத்தவர்கள் இன்றைய தினம் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அதன்பின்னர் பல்வேறு விடயங்களை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினர். அதில் ஒரு முக்கிய விடயம் தொடர்பாக பாரளுமன்ற உறுப்பினர் கயேந்திரகுமார் தெரிவிக்கையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனேடிய உயர்ஸ்தானியர் எரிக் வோல்ஸை இன்றையதினம் வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து உத்தியோக பூர்வமாக இலங்கை அரசாங்கத்தினுடைய கண்டனங்களை கனேடிய அரசாங்கத்திற்கு தெரிவித்திருக்கின்றார். முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் ஞாபகார்த்தமாக நினைவுத்தூபி அங்கு திறக்கப்பட்ட நிலையில் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்திருக்கின்றார்எந்தவித ஆதாரமும் இல்லாத இடத்தில் கனேடிய அரசாங்கம் இவ்வகையான ஒரு இனப்படுகொலைக்கான தூபி என்று அமைப்பதனை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார். ஜதார்த்தத்தில் திட்டமிட்ட வகையிலே கடந்த 70 வருடங்களுக்கு மேலாக வடகிழக்கிலேஇருக்ககூடிய தமிழ்த்தேச அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கபட்டிருக்கின்றன என்பது நிரூபிக்கபடக்கூடியதொரு விடயம்அந்தப்பின்னணியில் தமிழ் மக்கள் தங்களுடைய இருப்பை உறுதிப்டுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் தங்களுடைய நிலப்பரப்புக்ளை தாங்களே ஆளக்கூடிய ஒரு தீர்வைக் கேட்டிருக்கின்ற இடத்திலே அதை மறுத்து ஒர பாரியளவிற்கான குடியேற்றங்கனளை நடத்தி, வடகிழக்கு தமிழ் என்று சொல்ல முடியாதளவிற்கு ஒரு குடியேற்றங்களும் கட்டமைப்பு சார்ந்த இன அழிப்பும் அமைக்க தமிழர்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு ஆயுதமேந்தினர் அந்த போராட்டங்களை அழிப்பதற்கு 30 வருடங்களுக்கு மேலாக ஏலாத இடத்தில ஒரு இனப்படுகொலை செய்வதன் ஊடாக இந்த போராட்டத்தை அழிக்க வேண்டும் என்ற விதத்திலே இறுதியில் போராட்டம் மௌனிக்கப்பட்டது. அந்த போராட்டங்கள் மௌனிக்கப்ட்ட விதங்கள் தொடர்பாக பல ஆதாரங்கள் சர்வதேச மட்டத்திலே வெளிவந்திருக்கின்றன பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சேவை இந்த ஆதாரங்களை தொடர்சியாக வெளியிட்டிருக்கின்றனஅதுமட்டுமல்லாமல் இன்றைக்கு ஜநா மனிதஉரிமைகள் பேரவையிலே சர்வதேச மட்டங்களிலே இன்டைக்கு இருக்ககூடிய ஆதாரங்களோடு உத்தியோகபூர்வமான ஜநா மனித உரிமைப் பேரவையினுடைய மனித உரிமைக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் அங்கு போர்க்குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் உறுதிப்பட நடைபெற்றிருப்பதாக முடிவும் எடுகப்பட்டிருக்கின்றது அந்த அடிப்படையில்தான் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்ட இனப்படுகொலை என்று சொல்லுகின்ற இடத்தில அந்த இனப்படுகொலையை விசாரிப்பதற்கு கூட தயாரில்லாத இலங்கை அரசு ஆதாரங்கள் இல்லை என்று சொல்வது கேலிக்கூத்தான ஒரு விடயம் அதனை சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொள்ள தாயாரில்லாத விடயம் இன்டைக்கு ஆதாரங்கள் இல்லை அப்படி எதுவும் நடக்கவில்லை என்ற சொல்லுகின்ற இலங்கை அரசு உண்மையிலேயே தாங்கள் எதுக்குமே பயப்படத் தேவையில்லை என்றால் சர்வதேச குற்றவியல் விசாரணையை நடத்துவதற்கு ஒத்துழைப்பு தந்து தங்களுடைய நேர்மைத்தன்மையை, பொய்க்குற்றச்சாட்டுக்களுக்கு தொடர்பில்லை என்பதை நிரூபிக்கலாம் அதைச் செய்யாமல் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இணங்காமல் அவர்கள் அந்த விசாரைணகளை நடக்கவிடாமல் தட்டிக்கழித்து வருவது இந்த விடயங்கள் நடக்கவில்லை என்று கூறுவது ஏற்கத்தக்க விடயமல்லகனேடிய அரசாங்கம் ஆரம்பத்திலேயே தங்களுடைய செயற்பாடுகள் ஊடகவும் கருத்துக்கள் ஊடாகவும் இனப்படுகொலை என்ற விடயங்களை பெரிதளவில் ஏற்றுக் கொள்வில்லை ஆனால் காலம் போக போக ஆதாரங்கள் வெளிவரவர இன்றைக்கு தவிர்க்கமுடியாத உண்மையை ஏற்கவேண்டிய இடத்திற்கு தள்ளப்ட்டுள்ளார்கள் என்பது ஜதார்த்தம் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழ்கின்ற இடத்தில் அந்த ஆதாரங்களை இலங்கை அரசு மட்டும்தன் மறுத்துக்கொண்டு இருக்கும் ஆனால் இலங்கை அரசு போர் முடிவடைந்து 16 வருடங்கள் எந்தளவிற்கு தனிமைப்பட்டுக்கொண்டு போயிருக்கின்றது என்று தெரிகிறதே தவிர மாறி அந்த போரை வெண்டதற்கு பிறகு தங்களுடைய நாடும் தங்களுடைய அரசும் சர்வதேசமட்டத்திலே ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையிலே இல்லை அந்த வகையிலே கனேடியா வாழ் ஈழத்தமிழர்களுக்கு தாயகத்தில் தொடர்ந்தும் தமிழ் இனப்டுகொலைக்கு சர்வதேச விசாரணையை தொடர்ந்தும் கோருகின்ற தரப்பு என்ற வகையிலையும், தமிழ் மக்களுடைய தேச அந்தஸ்தை இன அழிப்பின் உடாக அழிக்கின்ற செயலை கடுமையாக எதிர்த்து அதற்கு ஒரு நிரந்தர தீர்விற்கு தமிழ்த் தேசம் அங்கீகரிக்க வேண்டும், தமிழர் தாயகத்திலே சமஸ்டி ஆட்சிமுறையினை கோருகின்ற ஒர தரப்பு என்ற வகையிலே தமிழத் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் தேசிய பேரவையும் கனேடிய வாழ் தமிழ் ஈழ மக்களுக்கு நாங்கள் தலைவணங்கி நன்றி கூறுவதோடு கனேடிய அரசாங்கத்திற்கு ஜனநாயகாத்திற்கும் உண்மைக்கும் இடமளிப்பதன் ஊடாக அந்த நினைவுத் தூபியை கட்டுவதற்கு அனுமதியை வழங்கியதற்கு அவர்களுக்கு எமது நன்றியையும் பாராட்டுக்களையும் பதிவ செய்ய விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் தமிழ் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொ. ஜங்கரநேசன் , ந. சிறீகாந்தா, ஈ.சரவணபவான், செல்வராசா கஜேந்திரன் , ஆகியோர் கலந்து கொண்டனர் .