யாழ் நல்லூர் வீரமாகாளி சிங்காரவேலன் சிவாயத்திரி சன்னிதானத்தில் எதிர்வரும் சித்திரை முதல் செவ்வாயிலிருந்து வாரத்தில் வருகின்ற நான்கு செவ்வாய்க்கிழமைகளிலும் அன்னதானம் வழங்கப்படும் என வீரமாகாளி பிரதம குரு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் உணவளிக்கும் செயற்பாட்டினை சுவிஸ் நாட்டில் வாழும் எமது அன்பர்களில் ஒருவரான ரட்ணராஜா அவர்களின் நண்பர்களும் இணைந்து முதல் கட்ட அன்னதானப் பணியினை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.
அதற்காக ரூபாய் பத்து இலட்சம் பணத்தை முதற்கட்டமாக வைப்பிலிட்டு உணவளிக்கும் மகத்தான பணியினை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.
இதன் நோக்கம் வெளி மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்தில் தங்கி வாழும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு உணவளிப்பதே பிரதான நோக்கம்.
அது மட்டுமல்லாது யாழ்ப்பாணத்தில் வறுமை கோட்டுக்கு உட்பட்டு வாழும் குடும்பங்கள் தங்கி வாழும் முதியவர்கள் மற்றும் அடியவர்களுக்கு உணவு தேவையின் ஒரு பகுதியை பூர்த்தி செய்யும் முகமாக வாரத்தில் நான்கு நாட்கள் உணவளிக்கும் செயற்பாட்டினை ஆரம்பித்துள்ளோம்.
இந்த நல்ல கைங்கரியம் தொடர்ந்து இடம் பெறுவதோடு இந்த செயற்பாட்டில் இணைந்து செயல்பட விரும்பும் அடியவர்களும் தமது பங்களிப்பினை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது அன்னதான கணக்கில் வைப்பிலிடப்பட்ட ரூபா 10 இலட்சம் ரூபாய்க்கான வங்கிப் புத்தகம் அன்னதான சபையிடம் கையளிக்கும் வைபவம் இடம்பெற்றது.
நல்லூர் வீரமாகாளி சிங்காரவேலன் சிவாயத்திரி சன்னிதானத்தில்ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் அன்னதானம் யாழ் நல்லூர் வீரமாகாளி சிங்காரவேலன் சிவாயத்திரி சன்னிதானத்தில் எதிர்வரும் சித்திரை முதல் செவ்வாயிலிருந்து வாரத்தில் வருகின்ற நான்கு செவ்வாய்க்கிழமைகளிலும் அன்னதானம் வழங்கப்படும் என வீரமாகாளி பிரதம குரு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் உணவளிக்கும் செயற்பாட்டினை சுவிஸ் நாட்டில் வாழும் எமது அன்பர்களில் ஒருவரான ரட்ணராஜா அவர்களின் நண்பர்களும் இணைந்து முதல் கட்ட அன்னதானப் பணியினை ஆரம்பித்து வைத்துள்ளார்கள். அதற்காக ரூபாய் பத்து இலட்சம் பணத்தை முதற்கட்டமாக வைப்பிலிட்டு உணவளிக்கும் மகத்தான பணியினை ஆரம்பித்து வைத்துள்ளார்கள். இதன் நோக்கம் வெளி மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்தில் தங்கி வாழும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு உணவளிப்பதே பிரதான நோக்கம். அது மட்டுமல்லாது யாழ்ப்பாணத்தில் வறுமை கோட்டுக்கு உட்பட்டு வாழும் குடும்பங்கள் தங்கி வாழும் முதியவர்கள் மற்றும் அடியவர்களுக்கு உணவு தேவையின் ஒரு பகுதியை பூர்த்தி செய்யும் முகமாக வாரத்தில் நான்கு நாட்கள் உணவளிக்கும் செயற்பாட்டினை ஆரம்பித்துள்ளோம். இந்த நல்ல கைங்கரியம் தொடர்ந்து இடம் பெறுவதோடு இந்த செயற்பாட்டில் இணைந்து செயல்பட விரும்பும் அடியவர்களும் தமது பங்களிப்பினை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.இதன்போது அன்னதான கணக்கில் வைப்பிலிடப்பட்ட ரூபா 10 இலட்சம் ரூபாய்க்கான வங்கிப் புத்தகம் அன்னதான சபையிடம் கையளிக்கும் வைபவம் இடம்பெற்றது.