• Dec 18 2025

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மீன்பிடி வலைகள்; பாதிக்கப்பட்ட திருமலை மீனவர்களின் கோரிக்கை

Chithra / Dec 14th 2025, 1:26 pm
image

மழை, வெள்ளம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர், மூதூர் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

மழை வெள்ளம் காரணமாக மீன்பிடி உபகரணங்கள், மீன்வாடிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலுக்குச் செல்லாத காரணத்தினால் பொருளாதார ரீதியாக கஷ்டங்களை எதிர்நோக்குவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

பெரும் தொகை கொடுத்து வாங்கிய மீன்பிடி வலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், பலரது வலைகளில் குப்பைகூழங்கள் வந்தடைந்து வலைகள் சேதமாகி உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போது ஆட்சியில் நல்லதொரு அரசாங்கம் இருக்கிறது. இவர்கள் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஏதாவது பிரதி உபகாரத்தை செய்து மீனவர்களின் வாழ்வை முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பூர், மூதூர் மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.   


வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மீன்பிடி வலைகள்; பாதிக்கப்பட்ட திருமலை மீனவர்களின் கோரிக்கை மழை, வெள்ளம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர், மூதூர் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.மழை வெள்ளம் காரணமாக மீன்பிடி உபகரணங்கள், மீன்வாடிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலுக்குச் செல்லாத காரணத்தினால் பொருளாதார ரீதியாக கஷ்டங்களை எதிர்நோக்குவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.பெரும் தொகை கொடுத்து வாங்கிய மீன்பிடி வலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், பலரது வலைகளில் குப்பைகூழங்கள் வந்தடைந்து வலைகள் சேதமாகி உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.தற்போது ஆட்சியில் நல்லதொரு அரசாங்கம் இருக்கிறது. இவர்கள் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஏதாவது பிரதி உபகாரத்தை செய்து மீனவர்களின் வாழ்வை முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பூர், மூதூர் மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.   

Advertisement

Advertisement

Advertisement