• Dec 18 2025

கனமழையால் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள்; பாரிய நஷ்டத்தை எதிர்கொள்ளும் விவசாயிகள்

Chithra / Dec 10th 2025, 3:46 pm
image

 

சீரற்ற காலநிலை காரணமாக மூழ்கடிக்கப்பட்ட வயல் நிலங்கள் மீண்டும் கனமழை காரணமாக மூழ்கியுள்ளது. 


தம்பலகாமம் பிரதேச கோயிலடியை அண்டிய வயல் நிலங்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன. 


ஓரிரு நாட்கள் பெய்த தொடர்ச்சியான கனமழை காரணமாக நெற்செய்கை வயல் நிலங்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. 


ஏற்கனவே விவசாயிகள் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி சில வயல்களில் மீண்டும் நெற் செய்கைக்காக விதைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.


திட்வா புயலின் தாக்கத்தால் பல வயல் நிலங்கள் அழிவுற்றிருந்தது. இதையடுத்து இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும்வேளை மீண்டும் தற்போது கனமழை பெய்து, வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் பாரிய நட்டத்தை விவசாயிகள் எதிர்நோக்கியுள்ளனர்.


இதனால் தம்பலகாமம் - சம்மாந்துரைவெளி, பிச்சைவெளி கோயிலடி பகுதி நிலங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 


பாதிக்கப்பட்ட நிலங்களுக்கான நஷ்ட ஈடுகளை பெற்றுத் தர ஆவணம் செய்யுமாறு உரிய அதிகாரிகளிடத்தில் விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். 


கனமழையால் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள்; பாரிய நஷ்டத்தை எதிர்கொள்ளும் விவசாயிகள்  சீரற்ற காலநிலை காரணமாக மூழ்கடிக்கப்பட்ட வயல் நிலங்கள் மீண்டும் கனமழை காரணமாக மூழ்கியுள்ளது. தம்பலகாமம் பிரதேச கோயிலடியை அண்டிய வயல் நிலங்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன. ஓரிரு நாட்கள் பெய்த தொடர்ச்சியான கனமழை காரணமாக நெற்செய்கை வயல் நிலங்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே விவசாயிகள் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி சில வயல்களில் மீண்டும் நெற் செய்கைக்காக விதைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.திட்வா புயலின் தாக்கத்தால் பல வயல் நிலங்கள் அழிவுற்றிருந்தது. இதையடுத்து இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும்வேளை மீண்டும் தற்போது கனமழை பெய்து, வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் பாரிய நட்டத்தை விவசாயிகள் எதிர்நோக்கியுள்ளனர்.இதனால் தம்பலகாமம் - சம்மாந்துரைவெளி, பிச்சைவெளி கோயிலடி பகுதி நிலங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நிலங்களுக்கான நஷ்ட ஈடுகளை பெற்றுத் தர ஆவணம் செய்யுமாறு உரிய அதிகாரிகளிடத்தில் விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement