• Jul 21 2025

சம்மளங்குளம் விவசாயப்பாதையின் சீரின்மையால் அவதியுறும் விவசாயிகள் – நேரில் சென்று ஆராய்ந்த ரவிகரன் எம்.பி!

Thansita / Jul 20th 2025, 3:37 pm
image

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட, காதலியார் சம்மளம்குளம் பகுதியிலுள்ள வயல் நிலங்களுக்குச் செல்லும் 03 கிலோமீற்றர் தூரமான குருவிச்சை ஆற்றுப்பால வீதியானது சீரின்றி காணப்படுவதால் அப்பகுதி விவசாயிகள் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் அப்பகுதி விவசாயிகளின் அழைப்பையேற்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றையதினம் (20) குறித்த பகுதிக்கு நேரடியாகச்சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார். 

குறிப்பாக 03கிலோமீற்றர் தூரமான இவ்வீதி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு காணப்படுவதால், இப்பகுதியில் 300ஏக்கர்வரையிலான விவசாயநிலங்களில் நெற்செய்கைமேற்கொள்ளும் விவசாயிகள் விவசாயத்திற்கான உள்ளீடுகளை எடுத்துச்செவ்வதிலும், அறுவடைக்காலத்தில் அறுவடையை எடுத்துச்செல்வதிலும் பலத்த இடர்பாடுகளுக்குள்ளாகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 


அத்தோடு குறித்த பகுதியில் அமைந்துள்ள குருவிச்சை ஆற்றுப்பாலமும் கடந்தகாலத்தில் மிகமோசமாக சேதமடைந்திருந்த நிலையில் நாடாளுமன்றஉறுப்பினர் ரவிகரன், வடக்குமாகாணசபை உறுப்பினராக இருந்தகாலத்தில் அவருடைய முயற்சியல் அந்தப்பாலம் புதிகாக அமைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அப்பாலத்தினைப் புதிதாக அமைத்துத்தந்ததைப்போல, அதனோடு இணைந்த 03கிலோமீற்றர் தூரமான வீதியைும் சீரமைத்துத்தருமாறு விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. 

குறித்த வீதிச் சீரமைப்புத்தொடர்பில் எழுத்துமூலமான கோரிக்கையினைத் தம்மிடம் கையளிக்குமாறும், தாம் இவ்வீதிச் சீரமைப்புத்தொடர்பில் கவனம்செலுத்துவதாகவும் நாடாளுமன்றஉறுப்பினர் ரவிகரன் அவர்களால் இதன்போது தெரிவாகப்பட்டது.


மேலும் இந்த  களவிஜயத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடன் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராசரத்தினம் கிரிதரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சம்மளங்குளம் விவசாயப்பாதையின் சீரின்மையால் அவதியுறும் விவசாயிகள் – நேரில் சென்று ஆராய்ந்த ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட, காதலியார் சம்மளம்குளம் பகுதியிலுள்ள வயல் நிலங்களுக்குச் செல்லும் 03 கிலோமீற்றர் தூரமான குருவிச்சை ஆற்றுப்பால வீதியானது சீரின்றி காணப்படுவதால் அப்பகுதி விவசாயிகள் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி விவசாயிகளின் அழைப்பையேற்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றையதினம் (20) குறித்த பகுதிக்கு நேரடியாகச்சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார். குறிப்பாக 03கிலோமீற்றர் தூரமான இவ்வீதி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு காணப்படுவதால், இப்பகுதியில் 300ஏக்கர்வரையிலான விவசாயநிலங்களில் நெற்செய்கைமேற்கொள்ளும் விவசாயிகள் விவசாயத்திற்கான உள்ளீடுகளை எடுத்துச்செவ்வதிலும், அறுவடைக்காலத்தில் அறுவடையை எடுத்துச்செல்வதிலும் பலத்த இடர்பாடுகளுக்குள்ளாகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்தோடு குறித்த பகுதியில் அமைந்துள்ள குருவிச்சை ஆற்றுப்பாலமும் கடந்தகாலத்தில் மிகமோசமாக சேதமடைந்திருந்த நிலையில் நாடாளுமன்றஉறுப்பினர் ரவிகரன், வடக்குமாகாணசபை உறுப்பினராக இருந்தகாலத்தில் அவருடைய முயற்சியல் அந்தப்பாலம் புதிகாக அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பாலத்தினைப் புதிதாக அமைத்துத்தந்ததைப்போல, அதனோடு இணைந்த 03கிலோமீற்றர் தூரமான வீதியைும் சீரமைத்துத்தருமாறு விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த வீதிச் சீரமைப்புத்தொடர்பில் எழுத்துமூலமான கோரிக்கையினைத் தம்மிடம் கையளிக்குமாறும், தாம் இவ்வீதிச் சீரமைப்புத்தொடர்பில் கவனம்செலுத்துவதாகவும் நாடாளுமன்றஉறுப்பினர் ரவிகரன் அவர்களால் இதன்போது தெரிவாகப்பட்டது.மேலும் இந்த  களவிஜயத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடன் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராசரத்தினம் கிரிதரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement