• Apr 17 2026

ஹந்தானையில் டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த குடும்பங்கள்; மூன்று மாதங்களாக கூடாரங்களில் வாழும் அவலநிலை

Chithra / Feb 27th 2026, 8:14 pm
image


கண்டி மாவட்டத்தின் ஹந்தானை 4வது தூண் பகுதியில் டிட்வா  சூறாவளி தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்கள், இதுவரை அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் தங்கி வருகின்றனர்.


அப்பகுதியில் உள்ள மூன்று வீடுகள் சூறாவளி அனர்த்தத்தால் கடுமையாக சேதமடைந்துள்ளன. 


இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஹந்தானை பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட கூடாரங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.


பெரும் அசௌகரியங்களின் மத்தியில் அவர்கள் அங்கு வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர். 


சம்பவம் இடம்பெற்று மூன்று மாதங்கள் கடந்தும் இதுவரை எந்தவிதமான நிரந்தர உதவியும் கிடைக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


“மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. எங்களுக்கு குறைந்தது ஒரு நிலத்துண்டை வழங்கி, ஒரு வீடு கட்டித் தர வேண்டும். இந்த தற்காலிக கூடாரங்களில் தங்கியிருப்பது மிகவும் கடினமாக உள்ளது. சிறிய குழந்தைகளும் கூட இந்த கூடாரங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்” என பாதிக்கப்பட்ட மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.


ஹந்தானையில் டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த குடும்பங்கள்; மூன்று மாதங்களாக கூடாரங்களில் வாழும் அவலநிலை கண்டி மாவட்டத்தின் ஹந்தானை 4வது தூண் பகுதியில் டிட்வா  சூறாவளி தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்கள், இதுவரை அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் தங்கி வருகின்றனர்.அப்பகுதியில் உள்ள மூன்று வீடுகள் சூறாவளி அனர்த்தத்தால் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஹந்தானை பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட கூடாரங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.பெரும் அசௌகரியங்களின் மத்தியில் அவர்கள் அங்கு வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர். சம்பவம் இடம்பெற்று மூன்று மாதங்கள் கடந்தும் இதுவரை எந்தவிதமான நிரந்தர உதவியும் கிடைக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.“மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. எங்களுக்கு குறைந்தது ஒரு நிலத்துண்டை வழங்கி, ஒரு வீடு கட்டித் தர வேண்டும். இந்த தற்காலிக கூடாரங்களில் தங்கியிருப்பது மிகவும் கடினமாக உள்ளது. சிறிய குழந்தைகளும் கூட இந்த கூடாரங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்” என பாதிக்கப்பட்ட மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement