• Sep 12 2026

யோஷித ராஜபக்ச வழக்கில் பொய் சாட்சியம்? – சாட்சியாளர் மீது சட்ட நடவடிக்கை

Chithra / Sep 11th 2026, 10:50 am
image


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கில் அரசதரப்பு சாட்சியாளர் ஒருவர், நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் வழங்கியதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


இதனையடுத்து, குறித்த சாட்சியாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.


கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்றுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார இந்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.


அரசதரப்பு சாட்சியாளரான பாலித்த கமகே என்பவர் நீதிமன்றத்தில் வழங்கிய சாட்சியம், இதற்கு முன்னர் அவர் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்துடன் முரண்படுவதாக பிரதி மன்றாடியார் நாயகம் மன்றில் தெரிவித்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து, சாட்சியாளர் பாலித்த கமகேவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.


அதேவேளை, நீதிமன்றத்தில் வழங்கிய சாட்சியம் தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடு குறித்து சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.


யோஷித ராஜபக்ச வழக்கில் பொய் சாட்சியம் – சாட்சியாளர் மீது சட்ட நடவடிக்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கில் அரசதரப்பு சாட்சியாளர் ஒருவர், நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் வழங்கியதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இதனையடுத்து, குறித்த சாட்சியாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்றுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார இந்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.அரசதரப்பு சாட்சியாளரான பாலித்த கமகே என்பவர் நீதிமன்றத்தில் வழங்கிய சாட்சியம், இதற்கு முன்னர் அவர் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்துடன் முரண்படுவதாக பிரதி மன்றாடியார் நாயகம் மன்றில் தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, சாட்சியாளர் பாலித்த கமகேவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.அதேவேளை, நீதிமன்றத்தில் வழங்கிய சாட்சியம் தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடு குறித்து சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement